ரெண்டு கண்ணும் வேணுமாம்ல!" - இன்ஸ்டா வலையில் சிக்கி படுகொலை: பல்லாவரம் பெண்களின் கொடூர ஸ்கெட்ச்


 பல்லாவரம் திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்த 22 வயசு செல்வக்குமார், ஏதோ கூலி வேலை செஞ்சுட்டு ஜாலியா இருந்திருக்காரு. ஆனா, விதி இன்ஸ்டாகிராம் ரூட்ல வந்து இவரை வளைச்சிருக்கு. ரீனான்னு ஒரு 24 வயசு பொண்ணு கூட இன்ஸ்டால பழக்கம் ஏற்பட்டு, அது அப்படியே 'உல்லாச' மேட்டரா மாறிருக்கு. இதுல ட்விஸ்ட் என்னனா, ரீனாவுக்கு ஆல்ரெடி கல்யாணமாகி புருஷன் கூடத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா, புருஷன் வேலைக்கு போன டைம்ல செல்வக்குமார் கூட 'தனிமை' பார்ட்டி நடத்தி செம கும்மாளம் போட்டுருக்காங்க.

மேட்டர் இதோட நிக்கல பாஸ்! ரீனாவோட தோழி ரஜிதா கூடவும் நம்ம செல்வக்குமார் 'சைடு' கேப்ல ரூட் போட்டுருக்காரு. இது ரீனாவுக்குத் தெரிய வந்தப்போ செம காண்டாகி பஞ்சாயத்த கூட்டி இருக்காங்க. ரெண்டு பொண்ணுங்களும் செல்வக்குமார மடக்கினப்போ, மனுஷன் என்ன சொன்னாரு தெரியுமா? "நீங்க ரெண்டு பேரும் என்னோட ரெண்டு கண்ணுங்க.. எனக்கு ரெண்டு பேருமே வேணும்"னு ஓப்பனா சொல்லிருக்காரு. இதைக் கேட்டதும் அந்தப் பொண்ணுங்களுக்கு மண்டை காய ஆரம்பிச்சுடுச்சு. "எங்களையே ஏமாத்துறியா? நீ இருந்தாதானே எங்களுக்கு நிம்மதி"ன்னு அங்கேயே கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுட்டாங்க.

அந்த ஸ்கெட்ச் படி, போன புதன்கிழமை நைட்டு செல்வக்குமாருக்கு ஒரு 'ஆசை' போன் போட்டுருக்காங்க. "வா.. நாம மூணு பேரும் சேர்ந்து ஜாலியா உல்லாசமா இருக்கலாம்"னு பல்லாவரம் சுபம் நகர் ஏரியாவுக்கு வரச் சொல்லிருக்காங்க. அந்தப் பையனும் "ஆஹா.. லக் அடிச்சிருச்சு"ன்னு ஓடி வந்துருக்காரு. ஆனா அங்கே இவங்க ரெண்டு பேரு மட்டும் இல்ல, கூடவே நாலு பசங்க பட்டா கத்தியோட வெயிட் பண்ணிட்டு இருந்துருக்காங்க. செல்வக்குமார் வந்ததும் எல்லாரும் சேர்ந்து சரமாரியா வெட்டி தள்ளிட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க.

போலீசுக்குத் தெரியக் கூடாதுன்னு, ரீனா அங்கே மயங்கி விழுந்த மாதிரி நடிச்சு இது ஏதோ வழிப்பறி திருடங்க பண்ண வேலைன்னு சீன் காட்டி இருக்காங்க. ஆனா, ரத்த வெள்ளத்துல கிடந்த செல்வக்குமாரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனப்போ, சிகிச்சை பலனில்லாம அவரு செத்துப் போயிட்டாரு. போலீஸ் அவங்க ஸ்டைல்ல விசாரிச்சப்போ, ரீனா, ரஜிதா அப்புறம் ஒரு 17 வயசுப் பையன் சிக்கிட்டாங்க. இவங்க எல்லாரும் சேர்ந்து இன்ஸ்டாகிராம்ல பசங்களை உஷார் பண்ணி, காசு பறிச்சு உல்லாசமா வாழ்ற ஒரு கேங்-ன்னு தெரிஞ்சு இப்போ கம்பி எண்ணிட்டு இருக்காங்க.

விசாரணையில என்ன தெரிஞ்சதுனா, செல்வக்குமார் கிட்ட இருந்தும் இவங்க காசைப் பிடுங்கி இருக்காங்க. இது அவருக்குத் தெரிஞ்சு சண்டையிட்டதுனாலதான், வழியில மறிச்சு வெட்டாம, "உல்லாசமா இருக்கலாம்"னு ஆசை வார்த்தை சொல்லி வரவழைச்சு 'கிளீன்' பண்ணி இருக்காங்க. இப்போ அந்த ரெண்டு பெண்களும் ஜெயில்ல இருக்காங்க, தப்பிச்சுப் போன மத்த பசங்களை போலீஸ் தேடிட்டு வராங்க. பசங்களா.. இன்ஸ்டால வர்ற 'லவ்'லாம் காசுக்காகத்தான், உஷாரா இருங்கப்பா!

Post a Comment

Previous Post Next Post