அமெரிக்கா அள்ளிட்டு வந்த ரஷ்ய கப்பலில் ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லை ?


ரஷ்யாவுக்குத் திருட்டுத்தனமா எண்ணெய் கொண்டு போகுதுன்னு சொல்லி, நம்ம டிரம்ப் மாமாவோட அமெரிக்கப் படை போன வாரம் 'மரினேரா' கப்பலை நடுக்கடல்ல வச்சு அப்படியே லபக்கிக் கிட்டு வந்துட்டாங்க. யாருக்கும் தெரியாம இருக்கணுமேன்னு கப்பல்ல இருந்த ட்ரான்ஸ்பாண்டர் (Transponder) கருவியை ஆஃப் பண்ணிட்டு, ரகசியமா இதைக் கடத்திட்டுப் போனாங்க. ஆனா, 13-ஆம் தேதி ஸ்காட்லாந்து கடற்கரை ஓரமா இந்தக் கப்பல் நங்கூரம் போட்டு நிக்கிறதை அந்த ஊர் மக்கள் போட்டோ எடுத்து சோஷியல் மீடியால தட்டிவிட, "அடப்பாவிகளா.. இங்க தான் வச்சிருக்கீங்களா?"னு அமெரிக்காவோட குட்டு மொத்தமா உடைஞ்சு போச்சு.

இந்தக் கப்பலைப் பிடிக்கிறதுக்காக அமெரிக்காவும் யூகே-வும் (UK) போட்ட பிளான் இருக்கே.. அது ஏதோ 'மிஷன் இம்பாசிபிள்' படம் ரேஞ்சுக்கு இருந்துச்சு. ஐஸ்லாந்து பக்கத்துல இருக்குற அந்த நடுங்க வைக்கிற பனிக்கடல்ல, ரஷ்யாவோட நீர்மூழ்கிக் கப்பல் (Submarine) ஒரு பக்கம் மிரட்டலா சுத்திக்கிட்டு இருக்க, இன்னொரு பக்கம் அமெரிக்கா ஹெலிகாப்டர், போர் விமானங்கள்னு மொத்தப் படையையும் இறக்கி சீன் போட்டாங்க. ஆனா நிஜத்துல அந்த கப்பலை பார்த்தா, நம்ம ஊரு காயிலாங்கடையில கூட எடுக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு துருப்பிடிச்சுப் போன பழைய இரும்பு டப்பா அது!

சரி, கப்பல் தான் பழையசு, உள்ளே இருக்குற எண்ணெய் வித்தா காசு பாக்கலாம்னு நினைச்ச அமெரிக்காவுக்கு அங்கதான் ஒரு பெரிய 'ஆப்பு' காத்துட்டு இருந்துச்சு. கோடிக்கணக்குல செலவு பண்ணி ஆபரேஷன் பண்ணிப் பார்த்தா, கப்பலுக்குள்ள ஒரு சொட்டு ஆயில் கூட இல்லையாம்! "அடேய்.. நிறைய காசு தேறும்னு பார்த்தா இப்படி பண்ணிட்டீங்களேடா"னு அமெரிக்கா இப்போ குழம்பிப் போய் நிக்குது. இது எப்படின்னா, ரோட்டுல நடக்கும்போது தடக்கி விழுந்தாலும், விடாத மாதிரி அங்கேயே படுத்துக்கிட்டு போஸ் கொடுக்குற கதைதான். ஒரு சொட்டு ஆயில் கூட இல்லாத கப்பலைப் பிடிச்சுட்டு இப்போ கெத்து காட்டிக்கிட்டு இருக்காங்க அமெரிக்காக்காரங்க.

"இது பகல் கொள்ளை, அநியாயம்"னு ரஷ்யா ஒரு பக்கம் கத்திக்கிட்டு இருந்தாலும், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மட்டும், "எங்க டிரம்ப் ஐயா சும்மா விளையாடல, இது வெறும் ஆரம்பம்தான்"னு இன்னமும் பீலா விட்டுட்டு இருக்காரு. இதைப்பார்க்கும்போது மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்துல சொல்ற மாதிரி, "யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?"ன்ற காமெடிதான் ஞாபகத்துக்கு வருது. கப்பல்ல இருந்த ரஷ்ய ஆட்களை மட்டும் "ஊருக்குப் போங்க"னு அனுப்பிட்டு, பாக்கி இருக்குற க்ரூ மேல கேஸ் போட்டு இப்போ அந்தப் பழைய இரும்புப் பெட்டியைக் காவலாளி மாதிரி நின்னு பார்த்துக்கிட்டு இருக்கு அமெரிக்கா!

Post a Comment

Previous Post Next Post