GOLF விளையாடிய தாயை கொன்ற 'மிருகம்'! 70km வேகத்தில் வந்த வேன்.. கணவன் கண்முன்னே நடந்த கொடூரம்


Video  கீழே உள்ளது

இங்கிலாந்தின் அஸ்டன் வுட் (Aston Wood) கோல்ஃப் மைதானத்தில் தன் கணவருடன் ஜாலியாக கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த 62 வயது சுசேன் செர்ரி (Suzanne Cherry) என்பவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. ஜான் மெக்டொனால்ட் (John McDonald) என்ற 52 வயது 'Cowboy Builder போலீஸாரிடம் இருந்து தப்பிக்கத் தனது வேனை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். 30 மைல் வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் 70 மைல் வேகத்தில், சாலையின் தவறான பக்கத்தில் (Wrong Side) ஓட்டி வந்த அந்த நபர், போலீஸ் காரையே இடித்துத் தள்ளியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தப்பிக்க வழியில்லாமல், கோல்ஃப் மைதானத்தின் புல்வெளிப் பகுதிக்குள் வேனை ஓட்டிச் சென்று அங்கிருந்த சுசேன் மீது மோதியுள்ளார்.

இந்தக் கொடூரத்தை நேரில் பார்த்த அவரது கணவர் கிளின்டன், "என் மனைவியைக் கொன்றுவிட்டீர்களே பாவிங்களா!" என்று கதறியுள்ளார். வேன் மோதிய வேகத்தில் சுசேன் படுகாயமடைந்து கீழே விழ, அந்த வேனுக்குள் இருந்த மூன்று பேர் இறங்கித் தப்பியோடியுள்ளனர். இதில் உச்சக்கட்டக் கொடூரம் என்னவென்றால், டிரைவர் ஜான் மெக்டொனால்ட் ஓடும்போது, கீழே விழுந்து கிடந்த சுசேனைத் தாண்டிக் குதித்து (Stepped over her) ஓடியிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுசேனுக்கு ஒரு கால் அகற்றப்பட்டும் பலனின்றி, நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விசாரணையில் அந்த ஜான் மெக்டொனால்ட் ஒரு 'பிராடு' (Fraud) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) கிடையாது, எழுதப் படிக்கவும் தெரியாது. தனது மகன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து முதியவர்களிடம் கூரை வேலை (Roofing work) செய்து தருவதாகப் பொய் சொல்லி ஆயிரக்கணக்கான பவுண்டுகளை மோசடி செய்துள்ளார். விபத்து நடந்த அன்று கூட, ஒரு முதியவரை ஏமாற்றி ஏடிஎம்-மில் பணம் எடுக்க அழைத்துச் சென்றபோதுதான் போலீஸார் இவர்களைத் துரத்தத் தொடங்கியுள்ளனர். சுமார் 12 நிமிடங்கள் நீடித்த அந்த 'சேஸிங்' (Police Chase) இறுதியில் ஒரு அப்பாவித் தாயின் உயிரைப் பறித்து முடிவடைந்தது.

இந்தக் கொலைகாரக் கும்பல் மீது தற்போது 'அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல்' (Dangerous Driving) மற்றும் 'மோசடி' (Conspiracy to commit fraud) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மெக்டொனால்ட் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "என் அலறல் சத்தம் அந்தப் பாவிங்களின் காதுகளில் வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கும்" என்று சுசேனின் கணவர் நீதிமன்றத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Source: News Page: Daily Mail URL: https://www.dailymail.co.uk/news/article-14272183/Cowboy-builder-led-police-12-minute-chase-mowing-mother-three-played-golf.html


Post a Comment

Previous Post Next Post