இது இந்தியா மாணவர்களுக்கு Good News : ஐரோப்பா கதவை திறந்துள்ளது !


இந்திய மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி தான் இது.  இந்தியாவோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், தற்போது இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கவும், அவர்கள் தங்கி வேலை செய்ய மற்றும் சுய தொழிலை ஆரம்பிக்க உதவும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா கதவை மூட , 24 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியன் தற்போது கதவை திறந்துள்ளது. விரிவாகப் பார்கலாம் !

"கனவு தேசம்" அமெரிக்காவுக்குப் போய் படிக்கணும்னு ஆசைப்பட்ட இந்திய மாணவர்களுக்கு இப்போ நேரம் சரியில்லை போலயே! அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அதிரடி விசா கட்டுப்பாடுகளும், குடியேற்றக் கொள்கைகளும் இந்திய மாணவர்களை ஒருவித 'ஸ்ட்ரெஸ்' (Stress) மோடுக்குத் தள்ளிடுச்சு. விசா கிடைக்குமா? கிடைச்சாலும் படிச்சு முடிச்சதும் அங்க வேலை செய்ய விடுவார்களா? என்ற கேள்விகள் இப்போ மாணவர்களையும், அவங்க பெற்றோர்களையும் தூங்க விடாம பண்ணுது. ஆனா கவலைப்படாதீங்க பாஸ்... அமெரிக்கா கதவை மூடினா என்ன, நமக்காக ஐரோப்பிய நாடுகள் தங்களோட கதவை "வெல்கம்" போர்டு போட்டுத் திறந்து வச்சுருக்கு!

ஐரோப்பிய ஒன்றியத்துல (EU) இருக்குற ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகள் இப்போ இந்திய மாணவர்களைத் தங்களோட நாட்டுக்கு இழுக்குறதுல ரொம்பவே குறியா இருக்காங்க. ஏன்னா, அங்க இப்போ தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகமா இருக்கு. இதைச் சரி பண்ண, படிக்க வர்ற மாணவர்களுக்குப் படிச்சு முடிச்சதும் அங்கேயே தங்கி வேலை தேடவும், பிசினஸ் தொடங்கவும் சூப்பரான விசா மற்றும் தங்குமிடம் (Residence permits) சலுகைகளை அள்ளித் தர்றாங்க. உதாரணத்துக்கு, ஜெர்மனியில் 18 மாசம் வரைக்கும் 'ஜாப் சீக்கர்' (Job seeker) விசா தர்றாங்க. இது அமெரிக்காவோட ஒப்பிடும்போது ரொம்பவே 'சில்'லான விஷயம்!

அமெரிக்காவுல விசாவுக்காகக் லட்சக்கணக்குல செலவு பண்ணி, கடைசியில 'அபாயண்ட்மெண்ட்' கிடைக்காம அல்லாடுறதுக்கு பதிலா, ஐரோப்பா ஒரு பெஸ்ட் சாய்ஸா (Best choice) மாறிடுச்சு. குறைவான கல்விக்கட்டணம், கை நிறைய சம்பளத்தோட வேலை, அப்புறம் சூப்பரான லைஃப்ஸ்டைல்னு ஐரோப்பா இப்போ இந்திய மாணவர்களுக்கு ஒரு "பவர் மூவ்" (Power move) ஆகிடுச்சு. சுருக்கமா சொல்லணும்னா, "அமெரிக்கா இல்லேன்னா என்ன... ஐரோப்பா இருக்கு"ன்னு இந்திய மாணவர்கள் இப்போ ஸ்மார்ட்டா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க என்ன நெனைக்குறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க!

Previous Post Next Post

Contact Form