சில நாட்டு தலைவர்கள் மதுரோ சிக்கியதுபோல சிக்க போறாங்க- ஆரம்பிச்சது USA - இப்போ சீனா போடும் பிளான் !


 

தைவானை எப்படியாவது வளைத்துப் பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங், தற்போது தனது ராணுவத்தை வைத்து ஒரு 'பகீர்' ஒத்திகையை நடத்தியுள்ளார். தைவான் நாட்டுத் தலைவர்களை நள்ளிரவில் புகுந்து பிடிப்பது அல்லது தீர்த்துக் கட்டுவது எப்படி (Decapitation Strike) என்பதைச் செய்து காட்டியுள்ளது சீன ராணுவம். இதற்காகச் சீன அரசு தொலைக்காட்சியில் ஒரு பரபரப்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா எப்படி வெனிசுலா அதிபர் மதுரோவை அதிரடியாகத் தூக்கியதோ, அதே பாணியில் நாங்களும் செய்வோம் என்று அமெரிக்காவுக்கும் ஒரு மிரட்டலைச் சீனா விடுத்துள்ளது.

இந்த இரண்டு நிமிட வீடியோவில், நள்ளிரவு நேரத்தில் ட்ரோன்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் சீனச் சிறப்புப் படைகள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன. முதலில் துல்லியமான குண்டு வீச்சு (Precision Bombing), பிறகு மின்னல் வேகத்தில் உள்ளே நுழையும் கமாண்டோக்கள் எனப் பார்ப்பதற்கே ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படம் போல அந்த ஒத்திகை இருக்கிறது. "பயங்கரவாதிகள் நான்கு பேரை ஒழித்துவிட்டோம்" என்று அவர்கள் கூறினாலும், தைவான் நாட்டுத் தலைவர்களைக் கடத்துவது தான் இவர்களது உண்மையான திட்டம் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

தைவானைச் சுற்றி சுமார் 30 ஏவுகணைகளை வீசி இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிய 'லைவ்-ஃபயர்' (Live-fire) ராக்கெட் சோதனையையும் சீனா நடத்தியுள்ளது. போர் விமானக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் நவீன போர் விமானங்கள் என ஒட்டுமொத்தப் பட்டாளத்தையும் தைவான் அருகே குவித்து, அந்தத் தீவையே வெளி உலகத் தொடர்பில் இருந்து துண்டிக்கும் 'பிளாக் கேட்' (Blockade) ஒத்திகையில் சீனா தீவிரமாக உள்ளது. தைவான் எங்களுடைய சொத்து, அதை எடுத்தே தீருவோம் என்பதுதான் கம்யூனிஸ்ட் சீன அரசின் ஒரே பிடிவாதமாக இருக்கிறது.

சமீபத்தில் தைவானுக்கு அமெரிக்கா சுமார் 8 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஆயுதங்களை விற்கச் சம்மதம் சொன்னதுதான் சீனாவைச் செம காண்டாக்கியுள்ளது. "நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்" என்று ஜஸ்டிஸ் மிஷன் 2025 (Justice Mission 2025) என்கிற பெயரில் மிக நெருக்கமாகப் போர் ஒத்திகையை நடத்தி மிரட்டுகிறார்கள். தைவானைத் தாக்கினால் நாங்களும் உள்ளே வருவோம் என்று ஜப்பான் சொன்னதும் இந்த நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போலாகிவிட்டது.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், சீனா செய்வது சாதாரணப் பயிற்சி மாதிரி தெரியவில்லை, இது நிஜமான போருக்கான முழுத் தயாரிப்பு என்கிறார்கள். வடகொரியாவின் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்யாவின் புடின் போன்ற 'வில்லன்' கூட்டாளிகள் சீனாவுக்குப் பின்னாடி இருப்பதால், இது ஒருவேளை மூன்றாம் உலகப் போராக (World War Three) மாறிவிடுமோ என்கிற அச்சம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "நான் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன்" என்று சொன்னாலும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் கைமீறிப் போகலாம்.



Post a Comment

Previous Post Next Post