ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை காலி செய்ய ரம் உத்தரவு !


 ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் காலி செய்துவிட்டு, எஞ்சியுள்ள துருப்புக்கள் அந்நாடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கட்டளை பிறப்பித்துள்ளது. ஈராக்கில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு (Air Defense System) தற்போது மிகவும் பலமிழந்த நிலையில் உள்ளது. ஈரான் ஏவும் பல ஏவுகணைகள் ஈராக்கில் விழுந்து வெடிப்பதால், அங்கு தங்கியிருக்கும் அமெரிக்கத் துருப்புகளுக்குப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சிரியாவின் ஒரு பகுதியில் அமெரிக்கா ரகசியமான சிறிய தளம் ஒன்றை வைத்துள்ளது. அந்தத் தளத்தைக்கூட ஈரான் கண்டறிந்துள்ள நிலையில், நேற்றைய தினம் (14) குறித்த தளத்தை நோக்கி 2 ட்ரோன்கள் வந்துள்ளன. அமெரிக்கப் படையினர் அவற்றைத் தடுத்துள்ள போதிலும், அந்த ரகசியத் தளத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவுக்குப் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா; அது தனது உளவுத் தகவல்கள் அனைத்தையும் ஈரானுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், துபாய் விமான நிலையத்தை ஈரான் தாக்கியது ஒன்றும் தற்செயலான அல்லது வெறும் பழிவாங்கும் செயல் அல்ல. தாக்குதல் நடந்த நேரத்தில், அமெரிக்கப் படைகளின் கட்டளைத் தளபதி ஒருவரும், சி.ஐ.ஏ அமைப்பின் இரண்டாம் நிலை அதிகாரி ஒருவரும் விமானம் மூலம் அமெரிக்கா செல்லத் தயாராக இருந்தனர். அவர்கள் இருவரும் துபாய் விமான நிலையத்தில் இருந்ததைக் கூட, ரஷ்யா மூலமாக ஈரான் துல்லியமாக அறிந்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு தற்போது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து ஈரானுக்குப் பல்வேறு உளவுத் தகவல்களைப் பரிமாறி வருகின்றன. இதன் காரணமாகவே சீனாவின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி ஊடாகச் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, நடுநிலை பேணும் இந்தியாவையும் ஈரான் எதுவும் செய்யவில்லை; கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்தியக் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி அளித்துள்ளது. ஈரானுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ள இத்தகைய உளவுத் தகவல்கள் இந்தப் போரின் பரிணாமத்தையே மாற்றியுள்ளன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் விமானங்கள் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அது குறித்த தகவல்கள் தற்போது டெஹ்ரானுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இது அலி கமேனி இறந்த பின்னரே தீவிரமாகத் தொடங்கியுள்ளது. இதனை ரஷ்யா முன்னரே செய்திருந்தால், நிச்சயம் அலி கமேனி காப்பாற்றப்பட்டிருப்பார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Previous Post Next Post

Contact Form