புலி வாலை பிடித்த கதை: கடந்த 100 மணி நேரத்தில் 3.7B பில்லியன் $ செலவு செய்து ஏவுகணைகளை ஏவிய அமெரிக்கா
கடந்த 100 மணி நேரத்தில் மட்டும், ஈரான் மீது சுமார் 1,980 ஏவுகணைகளை அமெரிக்கா ஏவியுள்ளது. இது போக 200 போர் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளதோடு, ஈரான் ஏனைய நாடுகளுக்கு அனுப்பிய ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்க, பல நூறு பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு நாளைக்கு 600 தொடக்கம் 750 மில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்கிறது என்று, சர்வதேச போர் ஆய்வு நிலையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா 100 மணி நேரத்தில் செலவு செய்துள்ள இந்த 3.9 பில்லியன் டாலர்கள் என்பது, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் 1 வருட பட்ஜெட் தொகை ஆகும். இதற்கு அமெரிக்க காங்கிரஸ் சபை அனுமதி கொடுத்து இருக்கிறது. ஆனால் இந்தத் தொகை என்பது ஒரு கடன் அடிப்படையில் தான் டிரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொகையை அமெரிக்க அரசு மீண்டும் அமெரிக்க மத்திய வங்கிக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுபோன்ற பெரும் தொகைப் பணத்தை எப்படி மீண்டும் செலுத்துவது?
இதனால் அமெரிக்க அரசு மக்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும், இல்லையென்றால் கைப்பற்றிய நாட்டில் இருந்து கச்சா எண்ணெயை எடுத்து விற்று அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதனால் தான் அமெரிக்கா ஈரானில் எண்ணெய் வளமுள்ள ஒரு பகுதியை கைப்பற்ற நினைக்கிறது. அங்கே தனது தரைப் படையை அனுப்ப முயற்சிக்கிறது. ஆனால் ஈரானின் ஒரு துண்டு நிலத்தைக் கைப்பற்றுவது என்பது, சிறிய விஷயம் அல்ல. அது ஒரு பெரும் சவால். ஏனெனில் ஈரான் இயற்கையாகவே ஒரு கோட்டை.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று 4 திசைகளிலும் இயற்கையான பாதுகாப்பு அரணாக மலைகள் இருக்கின்றன. இதனைக் கடப்பது என்பது தற்கொலைக்குச் சமம். மறைந்து இருந்து ஈரான் படைகள் தாக்கினால், அமெரிக்கா பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். இதேவேளை போரை முடிக்காவிட்டால், நாளுக்கு நாள் பில் எகிறிக்கொண்டே போகும். இதுபோக, துபாய், ஓமன், கத்தார் போன்ற நாடுகள் ஏற்கனவே நாசமாகி, பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. அதுவும் துபாய் நாட்டுக்கு மொத்தமாக 400 மில்லியன் டாலர்கள் ஒரு நாள் இழப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் "புலி வாலை" பிடித்த கதையாக அமெரிக்காவின் நிலை மாறிவிட்டது. விட்டாலும் கடிக்கும், பிடித்து வைத்திருந்தாலும் கடிக்கும் என்ற நிலை. ஆனால் ஈரானைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 1 மில்லியன் டாலர்களைக் கூட அவர்கள் செலவு செய்யவில்லை. ஈரான் தயாரிக்கும் ஒரு ட்ரோனின் விலை வெறும் 30,000 டாலர்கள், ஆனால் அதனைச் சுட்டு வீழ்த்த அமெரிக்கா பாவிக்கும் ஏவுகணையின் விலை 275,000 டாலர். இது போக மத்திய கிழக்கு நாடுகளிடம் கையிருப்பில் இருக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணைகள், 65% விகிதத்தால் குறைந்துள்ளன. இதனை நிவர்த்தி செய்ய, மத்திய கிழக்கு நாடுகள் பெரும் அளவில் ஏவுகணைகளை வாங்க வேண்டும். இதுவும் ஒரு எக்ஸ்ட்ரா செலவு.
இதேவேளை இந்தப் போர் முடியப்போவது இல்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடரும். அமெரிக்கா தாக்குதலை நிறுத்திவிட்டு, "நாம் வென்று விட்டோம்" என்று கூறி மார் தட்டிச் சொல்லி பின்னர் சென்றுவிடும். ஆனால் ஈரான் சும்மா இருக்குமா? அவ்வப்போது தன்னிடம் இருக்கும் ட்ரோன்களை "காத்து வாக்கில் ஒரு காதல்" போல தட்டிவிட்டால்... துபாய் நிலை என்ன ஆகும்? உலகின் மிகவும் பாதுகாப்பான நாடு, சொர்க்க பூமி, டேக்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்யலாம் என்ற இந்த 20 வருடக் கனவுத் திட்டம் மண்ணாய் போனது. இனி துபாய் பக்கமே உல்லாச பயணிகள் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள்.
"ஏனடா அமெரிக்காவோடு கூட்டணி சேர்ந்தோம்" என்று நினைக்கும் அளவு மத்திய கிழக்கு நாடுகள் தற்போது பதறிக் கொண்டு இருக்கின்றன. இதுதான் உண்மை நிலை. ஆனால் நீங்கள் பார்க்கும் செய்திகள் அனைத்துமே அமெரிக்க ஆதரவு ஊடகங்களின் செய்தி. எனவே நடுநிலை என்பது கிடையாது. ஒரு வகையில் பார்த்தால் இந்திய மத்திய அரசு கூட அமெரிக்காவின் சொல் கேட்டு ஆடும் ஒரு பொம்மையாகவே மாறிவிட்டது. இந்திரா காந்தி அம்மையாரைப் போல அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் ஒரு நல்ல தலைவர் இதுவரை இந்தியாவில் இல்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு வால் பிடிக்கும் மோடியின் கைகளில் மிஞ்சியது பள்ளிச் சிறுவர்களின் ரத்தக் கறை தான். முதல் நாள் அமெரிக்க தாக்குதலில் பாடசாலை ஒன்றின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இறந்துவிட்டார்கள். இதனை CNN நிருபர் கேட்டால், "அது நாங்கள் அல்ல, ஈரான் அடித்த ஏவுகணை மாறி அவர்கள் நாட்டிலேயே விழுந்து வெடித்துவிட்டது" என்று டிரம்ப் ஐயா "காக்கா கதை" சொல்கிறார். அமெரிக்கா இந்தப் போரில் தோற்றுவிட்டது! இதுவே உண்மை நிலை!

No comments: