Posted in

முதல்வர் விஜய், TVK அமைச்சர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்! கரணம் இதுதான்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் வெற்றிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) சரமாரியாகத் தேர்தல் வழக்குகள் (Election Petitions) தாக்கல் செய்யப்பட்டுள்ளது மாநில அரசியல் வட்டாரத்தில் மாபெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரியகில்சன் மற்றும் புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி இந்தத் தனித்தனி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் அரங்கேறியுள்ளதாக மனுதாரர்கள் தங்களது மனுக்களில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் (Perambur) சட்டமன்றத் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் அசுர வேக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் முல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் உயர் நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்குத் தொடர்ந்துள்ளார். இவருடன் சேர்ந்து அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களான தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதேபோல, வில்லிவாக்கம் (Villivakkam) தொகுதியில் 17,302 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றிக்கு எதிராகத் தொகுதி வாக்காளர் சிவராஜ் என்பவரும், ஆர்.கே. நகர் (R.K. Nagar) தொகுதியில் 49,668 வாக்குகள் வித்தியாசத்தில் அசுர வெற்றி பெற்ற அமைச்சர் மரியகில்சனுக்கு எதிராகத் திமுகவைச் சேர்ந்த மருது கணேஷ் என்பவரும் தேர்தல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

தவெக மற்றும் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் இந்த நீதிமன்றப் பலப்பரீட்சையில் நேரடியாக முட்டிக்கொண்டுள்ளனர். திருவரம்பூர் தொகுதியில் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தவெக எம்எல்ஏ நவலடிபட்டு விஜய்யின் வெற்றியை எதிர்த்துத் திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், முடக்குறிச்சி தொகுதியில் வெறும் 2,430 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தவெக எம்எல்ஏ சண்முகத்தின் வெற்றியை எதிர்த்துத் தொகுதி வாக்காளர் பெரியசாமியும் வழக்குகளைத் தொடுத்துள்ளனர். இதற்குப் பதிலடியாக, திருமயம் தொகுதியில் 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் வென்ற திமுக எம்எல்ஏ ரகுபதியின் வெற்றியை எதிர்த்துத் தவெக வேட்பாளர் சிந்தாமணியும், மானாமதுரை தொகுதியில் வெறும் 128 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தவெக எம்எல்ஏ இளங்கோவனுக்கு எதிராகத் திமுகவின் முன்னாள் அமைச்சர் தமிழரசியும் நீதிமன்றக் கதவுகளைத் தட்டியுள்ளனர்.

மறுபுறம் மயிலம் தொகுதியில் 3,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வெற்றியை எதிர்த்துத் தொகுதி வாக்காளர் குணசேகரன் என்பவரும், புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதியில் 1,025 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற லட்சிய ஜனநாயக கட்சி (LJK) எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு எதிராக விஸ்வநாதன் என்பவரும் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி முறைகேடுகள் செய்துதான் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இந்த வெற்றிகளைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுக்களில் கோரப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து சில வாரங்களிலேயே ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் பதவிகளுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் இத்தனை வழக்குகள் குவிந்திருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.