Posted in

7 தவெக MLA-க்களை ஏற்கனவே வாங்கி விட்ட செந்தில் பாலாஜி- பெரும் அதிர்ச்சியில் விஜய் !

கடந்த 40 நாட்களாகவே கரூரில் முகாமிட்டுள்ள ஒரு குழு, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரைத் தெரிவு செய்து, அவர்களின் பின்புலத்தைப் பார்த்து, பல திசைகளில் ஆராய்ந்து அவர்களைத் தொடர்பு கொண்டு, 50 கோடி வரை தருவதாகப் பேரம் பேசியுள்ளார்கள். இவர்களில் 7 தவெக சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த பேரத்திற்கு விலைபோயுள்ள விஷயம், விஜய்யைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விஷயம் தெரியவந்ததே நேற்று முன்தினம் (29) தான்.

காரணம், தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா இந்த விஷயத்தை வெளியே கொண்டு வந்ததுதான். இதனால் போலீசார் அடுத்தடுத்து பலரைக் கைது செய்துள்ள நிலையில், மிக முக்கியமானவர் என்று கருதப்படும் திருநாவுக்கரசரின் செல்போனில், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சுமார் 10 பேரின் செல் எண்கள் உள்ளதும், கடந்த பல நாட்களாக திருநாவுக்கரசர் அவர்களோடு பேசி வந்ததும் போலீசார் ஊடாக தவெக தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 7 சட்டமன்ற உறுப்பினர்களும் ஏன் தவெக தலைமைக்கு இதனைத் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனைய 3 சட்டமன்ற உறுப்பினர்களும் 29ஆம் தேதி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்கள். ஆனால், தற்போது இந்த 7 தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் வசமாகச் சிக்கிக்கொண்டார்கள். தமிழகத்தில் ஆட்சி அமைக்க, 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிரூபித்துள்ளது தவெக. இதனால் அடுத்த 6 மாதத்திற்கு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியாது. எனவே, சபாநாயகர் மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால், தவெக ஆட்சி கவிழ்ந்ததற்குச் சமம் என்று ஸ்டாலின் மற்றும் உதய் ஆகியோர் திட்டம் தீட்ட,

இந்த அசைன்மென்ட்டிற்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்துள்ளார்கள். செந்தில் பாலாஜி தனது தம்பி ஊடாக கரூரில் ஒரு குழுவை அமைத்து, கரூரில் ஒரு முழுப் படையைச் செயல்படுத்தி வந்துள்ளார். இந்த நெட்வொர்க் அனைத்துமே தற்போது போலீசார் வலையில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாகியுள்ளார். ஆனால், செந்தில் பாலாஜியின் 2 முக்கியக் கைக்கூலிகளைப் போலீசார் கைது செய்து, பல ஆவணங்களையும் பணத்தையும் கைப்பற்றியுள்ளார்கள்.

இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், ஸ்டாலினையும் அவர் மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதியையும் மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார். “கடந்த 50 ஆண்டுகளில் ஒரு சிட்டிங் முதல்வர் தோற்றது இல்லை என்றும், இப்படி ஒரு அசிங்கமான மற்றும் அவமானம் மிக்க தோல்வியைத் தான் ஸ்டாலின் அடைந்தார்” என்றும் அமைச்சர் பேசியுள்ளார். திமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை என்றும், எனவே அரசியலை விட்டு திமுக கட்சி இனி ஒதுங்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர், உதயநிதி கடந்த சில வாரங்களாகவே துபாயில் உள்ளதாகக் கூறியுள்ளார். இதுவரை எந்தவொரு தவெக பேச்சாளரும் இந்த அளவிற்கு ஸ்டாலினையோ அல்லது உதயநிதியையோ இப்படித் தாக்கிப் பேசியது இல்லை. ஆனால், தற்போது தவெக கட்சி மிகவும் அதிருப்தியில் உள்ளது என்பதனை இது காட்டுகிறது. இதற்கு திமுக சார்பாக எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை. சில நாட்களில் செந்தில் பாலாஜி கைதாக வாய்ப்புள்ளது. தவெக இதற்கு நிச்சயம் பழிவாங்கியே தீரும். இந்த பெரும் கூட்டுச்சதி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள விஷயம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“திமுக அரசு மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து வைத்துக் கொண்டு, அதனை தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுத்துப் பேரம் பேசி வருகிறது என்றும், இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவதுதான் நல்லது என்றும் அவர் மேலும் தெரிவித்துக் கடுமையாகச் சாடியுள்ளார். இதனூடாக திமுக செய்த சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்பதே உண்மை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *