Posted in

ஈரான் மீது ‘அனைத்து வெடிகுடுகளின் தாய்’ போன்ற பேரழிவு ஆயுதத்தைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டம்

அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (CENTCOM), ஈரானின் முக்கிய ஆற்றல் துறை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்காகக் கொண்டு பல்வேறு ராணுவத் தாக்குதல் திட்டங்களை வெள்ளை மாளிகையின் பரிசீலனைக்குச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் GBU-43/B எனப்படும் ‘மேசிவ் ஆர்ட்னன்ஸ் ஏர் பிளாஸ்ட்’ (MOAB) எனப்படும் சுமார் 9.8 டன்கள் எடையுள்ள மாபெரும் வழிகாட்டப்பட்ட வெடிகுண்டைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி ஆழமான பதுங்கு குழிகளைத் தகர்ப்பதை விட, பரந்த பரப்பளவில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தக்கூடிய இந்த ஆயுதம் ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டால் அது மிகப்பெரிய போர்க்கள மாற்றமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

எனினும், ஈரானின் மிக ஆழமான மலைப்பாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி அணுசக்தி மையங்களை இந்த வெடிகுண்டு முழுமையாக அழிக்குமா என்பது குறித்து ராணுவ நிபுணர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. மிகப் பெரிய பரப்பளவில் அழிவை ஏற்படுத்தக் கூடிய இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதால் பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படலாம் எனவும், இது பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து ஈரான் தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு வெளிநாட்டுத் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தங்களது நாட்டுப் படைகள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல் போக்கில் இந்த ஆயுதப் பரிசீலனை புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் இதன் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீவிரமாக உற்று நோக்கி வருகின்றன.