கோவையின் காந்திபுரத்தில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை’ முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து வைத்துள்ளார். இந்த நவீன நூலகம் முந்தைய அரசின் காலத்தில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இது குறித்துச் செய்தியாளர்களின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், திட்டங்களை உருவாக்குவதிலும் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பதிலும் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பணிகளாக இருந்தாலும், அதற்கான நிதி எங்குருந்து செலவிடப்பட்டது என்பது குறித்து தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
அரசுத் திட்டங்கள் என்பது தொடர்ச்சியானவை என்றும், மக்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் இதுபோன்ற அறிவுசார் கட்டமைப்புகளைக் குறைகூறுவது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசின் சாதனைகளை மறைக்க முயல்பவர்களின் விமர்சனங்களுக்கு மக்கள் உரிய பதிலடி தருவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த அதிரடி விளக்கமானது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், இரு தரப்புக்கும் இடையிலான கருத்து மோதல்களை அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.