Posted in

சென்னையில் புதிய லுலு ஹைப்பர் மார்க்கெட் திறப்பு: பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லுலு குழுமம், சென்னை ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் தனது முதலாவது பிரம்மாண்டமான ஹைப்பர் மார்க்கெட்டை அண்மையில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தது. திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்து ஷெனாய் நகர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ நிலையங்களில் உள்ள அங்காடிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஒரே கூரையின் கீழ் அனைத்து வகையான சர்வதேசப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் கிடைக்கப் பெறுவதால் குடும்பம் குடும்பமாக வந்து பொதுமக்கள் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.

சென்னையின் முக்கியப் பகுதிகளிலிருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து வருவதால், போக்குவரத்து மற்றும் பில்லிங் கவுண்டர்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருவதாகக் கூறrப்படுகிறது. இந்த அதீத வரவேற்பைக் கருத்தில் கொண்டு, தாம்பரம், வேளச்சேரி, அண்ணா நகர் மற்றும் போரூர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளிலும் லுலு நிறுவனத்தின் கிளைகளை விரைவில் விரிவுபடுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புதிய அங்காடிகளைத் தொடங்க லுலு குழுமம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

விரைவில் வரவிருக்கும் இந்த புதிய விரிவாக்கப் பணிகள் மூலம் சில்லறை வர்த்தகச் சந்தை மேலும் விரிவடைவதுடன், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.