Posted in

பூமிக்கு அப்பால் புதிய சாதனை: நவம்பர் 18-ல் ஒரு ஒளி-நாள் தொலைவை எட்டுகிறது வாயேஜர் 1 விண்கலம்!

கடந்த 1977ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், சுமார் 49 ஆண்டுகால தொடர் பயணத்திற்குப் பிறகு தற்போது விண்வெளியில் இந்த வரலாற்றுச் சாதனையை நெருங்கியுள்ளது. ஒளி கதிர்கள் ஒரு முழு நாள்களில் (24 மணிநேரம்) கடக்கக்கூடிய தூரமான சுமார் 2,590 கோடி கிலோமீட்டர் தொலைவை இந்த விண்கலம் கடந்துள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நமது சூரிய மண்டலத்தின் எல்லைகளைத் தாண்டி விண்வெளியில் பயணித்து வரும் இந்த விண்கலம், மனித வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டும் முதல் சாதனையாகப் பதிவாகிறது.

பூமியிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகள் அல்லது விண்கலம் அனுப்பும் தரவுகள் நம்மை வந்தடைய இனி முழுமையாக 24 மணி நேரத்திற்கும் மேலான காலதாமதம் ஆகும் என விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். இந்த மகத்தான மைல்கல் குறித்துப் பேசியுள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், அரை நூற்றாண்டு கால உழைப்பும் தொழில்நுட்பக் காலககமும் மனிதனின் எல்லையற்ற அறிவுக்குச் சான்றாக நிற்பதாகப் பாராட்டியுள்ளனர்.

விண்கலத்தின் தற்போதைய இயக்க நிலை மற்றும் அதன் மின்கல ஆற்றல் தொடர்பான தரவுகளை நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் விண்கலம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அது கடந்து செல்லும் விண்வெளிப் பாதையின் தகவல்கள் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.