Posted in

பிரிட்டனில் போலோ புயல் சீற்றம்: பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு!

பிரிட்டனின் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் ‘போலோ’ (Storm Boelo) புயல் தீவிரமடைந்துள்ளது. ஆஸ்டன் புயல் வீசிய அடுத்த இரு தினங்களில் இந்த புதிய புயல் கரையை தொட்டுள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மின்சார வசதியின்றி தவித்து வருவதுடன், ரயில், விமானம் மற்றும் படகு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வு மையம் (Met Office) இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு ‘ஆம்பர்’ மற்றும் ‘எல்லோ’ எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. காற்றின் வேகத்தால் காற்றில் பறந்து வரும் பொருட்கள் மற்றும் கடல் அலைகளின் சீற்றத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

முக்கிய நெடுஞ்சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளதுடன், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், வானிலை சீராகும் வரை மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.