தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற அமைப்பின் மூலம் ரூ.100 கோடி நிதி திரட்டி மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் 177 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், மத்தியக் குற்றப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்புக் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும் விசாரணை தொடர வேண்டியதன் அவசியத்தைக் சுட்டிக்காட்டியும் அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே சங்கத்தின் முக்கிய நிர்வாகியான பி.டி. அரசுக்குமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் புலனாய்வு அமைப்புகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.