ஈரானின் ஆழப்பகுதியில் நடந்த அதிரடி நடவடிக்கை உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் F‑15E Strike Eagle போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அதில் இருந்த இரண்டு விமானிகள் பராசூட்டில் தப்பினர். அவர்கள் ஈரானின் மலைப்பகுதிகளில் சிக்கிக் கொண்ட நிலையில், அமெரிக்கா இரகசிய மீட்பு நடவடிக்கையை துவக்கியது. இந்த நடவடிக்கை “அமெரிக்க வரலாற்றிலேயே மிக துணிச்சலான rescue mission” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதலில் ஒரு விமானி மீட்கப்பட்டாலும், இரண்டாவது அதிகாரி காயங்களுடன் மலைப்பகுதியில் மறைந்து இருந்தார். அவரை பிடிக்க ஈரான் படைகள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், அமெரிக்க Special Forces இரவு நேரத்தில் பல ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், ரகசிய தகவல் திசைதிருப்பல் நடவடிக்கைகள் மூலம் மீட்பு முயற்சியை தீவிரப்படுத்தியது. CIA திட்டமிட்ட தவறான தகவல் பரப்பல் மூலம் ஈரான் படைகளை வேறு பகுதிகளுக்கு திசைதிருப்பியது.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது மிகப்பெரிய திருப்பமாக, மீட்பு குழுவை எடுத்துச் செல்ல வந்த transport விமானங்கள் ஈரானின் தொலைதூர பகுதியில் சிக்கிக் கொண்டன. அவை எதிரி கைக்கு சென்றால் ரகசிய தொழில்நுட்பம் கசிந்துவிடும் அபாயம் இருந்ததால், அமெரிக்க படையினர் தாங்களே அந்த விமானங்களை வெடிக்கச் செய்தனர். சில தகவல்களில் இரண்டு விமானங்கள் destroy செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இறுதியில் கடும் துப்பாக்கிச்சூடு நடுவே 200க்கும் மேற்பட்ட கமாண்டோ படை இரண்டாவது விமானியையும் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றது. இந்த நடவடிக்கையின் போது பல அமெரிக்க விமானங்கள் சேதமடைந்ததாகவும், ஈரான் சிலவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியுள்ளது. இருவரும் உயிருடன் மீட்கப்பட்டதால், இந்த நடவடிக்கை உலகளவில் “மிக ஆபத்தான ரகசிய rescue operation” என பேசப்படுகிறது.