Posted in

தாலிபன் ஆட்சியில் ஆப்கான் பெண்கள் சந்திக்கும் கொடூரங்கள்: மனித உரிமை மீறல்கள் குறித்து ஆதங்கம்!

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தாலிபான்கள், பெண்களின் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது பல்வேறு கடுமையான தப்படைகளைக் கொண்டுவந்துள்ளனர். பொது இடங்களுக்குச் செல்லும் போது ஆடைக் கட்டுப்பாடுகளை மீறுதல், ஆண்கள் துணையின்றி வெளியேறுதல் மற்றும் வாசனைத் திரவியங்கள் திரவியங்களைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பெண்கள் பொதுவெளியில் கசையடி தண்டனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தாலிபான் அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்படும் பெண்கள் சிறைச்சாலைகளில் எதிர்கொள்ளும் வன்முறைகள் குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

தாலிபான்களின் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சித்திரவதைகள் காரணமாக ஆப்கான் பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுதந்திரமான நடமாட்டம் பறிக்கப்பட்ட சூழலில், வாழ்வாதாரமின்றியும் மன அழுத்தத்தினாலும் பல பெண்கள் தற்கொலை முடிவுகளை நோக்கித் தள்ளப்படுவதாக தொண்டு நிறுவன அறிக்கைகள் கவலை தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் முறையற்ற தண்டனைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தாலிபான் அமைப்பின் மீறல்களைத் தடுத்து நிறுத்தவும் சர்வதேச நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் குரல் கொடுத்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான சர்வதேச ஆதரவையும் பாதுகாப்பையும் உறுதி செய்யக் கோரி மனித உரிமை அமைப்புகள் ஐநா சபையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.