Posted in

“டீல் ஓகே” போல உள்ளது என ரம் அறிவிப்பு- ஈரான் அமெரிக்க போர் ஒப்பந்தம்

ஒரு பக்கம் 48 மணி நேர கெடு விதித்து உள்ளேன் என்று ரம் அறிவிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்க, சற்று முன்னர், வெள்ளை மாளிகை மேலும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் அதிபர் ரம், “டீல் ஓகே” என்று கூறியுள்ளதாக அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. போதுமடா சாமி என்று மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் இன்று முடிவுக்கு வரக்கூடும் என்ற அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நடுவர் முயற்சியில் “Islamabad Accord” என்ற புதிய ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட்டு, உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் இரண்டு கட்டமாக அமையும் என்று கூறப்படுகிறது. முதல் கட்டத்தில் அமெரிக்கா-ஈரான் இடையிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படும். இரண்டாவது கட்டத்தில் விரிவான அமைதி ஒப்பந்தம் 15 முதல் 20 நாட்களில் இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிடுவது, பதிலாக பொருளாதார தடைகள் தளர்த்தப்படுவது போன்ற அம்சங்கள் இடம்பெறலாம்.

இந்த திட்டம் இன்று திங்கட்கிழமைக்குள் இரு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும் என நடுவர் தரப்புகள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவத் தலைவர் அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகளுடன் இரவு முழுவதும் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் ஹோர்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த திட்டத்திற்கு ஈரான் முழுமையாக ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், தற்காலிக போர்நிறுத்தத்திற்கு பதிலாக நீரிணையை திறப்பதில் தயக்கம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீண்டகால அமைதி உறுதி மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டும் என ஈரான் வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் மத்திய கிழக்கு போர் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்றும், உலக எண்ணெய் விலை குறையும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். உலகளவில் மிக முக்கியமான கடல் பாதையாக இருக்கும் ஹோர்முஸ் திறக்கப்படுவது சர்வதேச வர்த்தகத்திற்கும் பெரிய நிம்மதியை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.