Posted in

ஜனவரி 6 கேபிட்டல் தாக்குதல் டிரம்ப்பை அவரது கல்லறை வரை தொடரும்: ஜோ பைடன் சுயசரிதையில் கருத்து!

ஜோ பைடன் எழுதியுள்ள “பிராமிஸ் மீ, அமெரிக்கா” (Promise Me, America) என்ற சுயசரிதை புத்தகம் வரும் நவம்பர் 17 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்தப் புத்தகத்தின் பகுதிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், 2021 ஜனவரி 6-ஆம் தேதி வாஷிங்டன் கேபிட்டல் கட்டடத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து பைடன் தனது கடுமையான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். 2020 அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள டிரம்ப் கிளர்ச்சியை வழிநடத்தினார் என்றும், தாக்குதலில் ஈடுபட்ட வன்முறையாளர்களுக்கு டிரம்ப் மன்னிப்பு வழங்கியதைக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் எழுதியுள்ளார்.

மேலும், 2024 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்பைச் சந்தித்தபோது, டிரம்ப் அரசியல் தாண்டி நட்புடன் பேச முயன்ற சம்பவத்தையும் பைடன் அதில் விவரித்துள்ளார். அரசியல் சட்ட நிறுவனங்களையும் நாட்டின் ஜனநாயகப் பாரம்பரியத்தையும் சீர்குலைக்கும் வகையில் டிரம்ப்பின் ஆட்சிக் காலம் அமைந்ததாக பைடன் விமர்சித்துள்ளார். டிரம்ப்பின் முந்தைய நிர்வாக முடிவுகள் அமெரிக்காவின் சகிப்புத்தன்மையையும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளையும் பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது புரோஸ்டேட் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வரும் ஜோ பைடன், மருத்துவர்களின் ஆலோசனைப்படி புத்தக வெளியீட்டுப் பரப்புரைக் நிகழ்வுகளைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.

எனினும், அமெரிக்க ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும் 2021 ஜனவரி 6 சம்பவங்களையும் அமெரிக்க மக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.