சென்னை பெருநகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 9 காவல் ஆய்வாளர்களை (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 7 ஆய்வாளர்களுக்குக் புதிதாகக் காவல் நிலையங்களில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணம் மற்றும் பணித் தேவை அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிட மாற்ற உத்தரவின்படி, கொடுங்கையூர் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த டி. செல்வமணி தரமணி சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்திற்கும், எம். ரங்கநாதன் நொளம்பூர் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், டி. செல்வராணி IUCAW பிரிவுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜே. ஞான அருள் ராஜாமணி ஹார்பர் குற்றப்பிரிவுக்கும், ஜே. கஜலட்சுமி மத்திய குற்றப்பிரிவுக்கும், ஆர். அலெக்ஸ் கொடுங்கையூர் குற்றப்பிரிவுக்கும், ஆர். கண்ணன் புழல் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
புழல் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ். வசந்த ராஜா எம்கேபி நகர் குற்றப்பிரிவுக்கும், எஸ். அருணாச்சல ராஜா வியாசர்பாடி குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய காவல் நிலையங்களில் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.