உக்ரைன் போர்க்களத்தில் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள ஆபத்தான ‘கொலை மண்டலங்களைத்’ தவிர்க்கும் நோக்கில், சோவியத் காலத்து நிலத்தடி குழாய்களைப் பயன்படுத்திப் புதிய வகை ரகசியப் போர்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னணியில் உள்ள எதிரி நாட்டுப் படைகளின் கண்களில் படாமல் பதுங்கு குழிகள் மற்றும் பழைய குழாய்கள் வழியாக உக்ரைன் வீரர்கள் ரகசிய நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பரந்த அளவில் பரவியுள்ள இந்தச் சோவியத் கால எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய் கட்டமைப்புகள் தற்போது ராணுவ ரீதியான ரகசியப் போக்குவரத்துப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்பரப்பில் ஆளில்லா விமானங்களின் (டிரோன்) கண்காணிப்பு மற்றும் தாக்குதல்கள் அதிகரித்துவிட்ட சூழலில், பாதுகாப்பான முறையில் எதிரியின் பின் பகுதிக்குப் சென்று தாக்க இந்த நிலத்தடி வழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
வான்வழித் தாக்குதல்கள் மற்றும் நவீன கண்காணிப்பு கருவிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இரு தரப்பு ராணுவங்களும் தங்களது நடவடிக்கைகளை நிலத்திற்குக் கீழே மாற்றத் தொடங்கியுள்ளன. குறிப்பாகப் பதுங்கு குழிகள், நிலத்தடி மருத்துவமனைகள் மற்றும் தளவாடப் பரிமாற்றப் பாதைகள் மூலமாகப் போர்க்கள வியூகங்கள் முழுமையாக மாறிவருவது பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழலில் நிலத்தடிப் போர்முறை மற்றும் உள்கட்டமைப்புப் பாதுகாப்பு ஆகியவை இரு நாட்டு ராணுவங்களாலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் புதிய உத்திகள் எதிர்காலப் போர்க்களங்களின் தன்மையை முழுமையாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.