‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவாக வந்து இல்லத்தரசிகளின் கோபத்திற்கு ஆளானாலும், இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்தால் இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் ‘கிளீன் போல்டு’ ஆகிவிடுகிறார்கள். 1983-ல் பிறந்தவர் என்று சொன்னால் சத்தியமாக யாரும் நம்ப மாட்டார்கள்; அந்த அளவுக்கு 20 வயது இளம்பெண் போலத் தனது உடலமைப்பை மிகவும் கச்சிதமாகப் பராமரித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள சில ‘கிளாமர்’ புகைப்படங்கள், இணையத்தையே ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கின்றன.
கருப்பு நிற டைட் உடையில், தனது வளைவு நெளிவுகள் அப்பட்டமாகத் தெரியும் வகையில் அவர் கொடுத்துள்ள அந்த ‘அக்ரோஷமான’ போஸ்கள், காண்போரைச் சொக்கிப்போக வைக்கின்றன. “வயசானாலும் உங்க அழகும் அந்த அந்தஸ்தும் இன்னும் குறையவே இல்லை” என ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸை தெறிக்க விடுகிறார்கள். எந்நேரமும் ஜிம்மே கதி என்று கிடக்கும் ரேஷ்மா, தனது ஃபிட்னஸ் ரகசியத்தை அவ்வப்போது வீடியோவாகப் பதிவிட்டு, மற்றவர்களுக்கும் ஒரு ‘இன்ஸ்பிரேஷனாக’ இருந்து வருகிறார். ஒரு பக்கம் சீரியலில் குடும்பப் பெண்ணாகத் தெரிந்தாலும், மறுபக்கம் இந்த அளவுக்குக் கிளாமர் காட்டி ரசிகர்களை ஏங்க வைப்பதில் அவர் கில்லாடி!
சினிமாவில் ‘புஷ்பா புருஷன்’ காமெடி மூலம் ஃபேமஸ் ஆனாலும், தற்போது ஒரு புதிய ரவுண்டு வரத் தயாராகிவிட்டார் ரேஷ்மா. இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெறும் ஆரம்பம் தான் என்றும், விரைவில் ஒரு பெரிய பிராஜெக்டில் படு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் அவரைப் பார்க்கலாம் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. “1983-ஆ? இல்ல 2003-ஆ?” எனச் சந்தேகப்படும் அளவுக்கு ஜொலிக்கும் ரேஷ்மாவின் இந்த ‘ஹாட்’ அவதாரம், இப்போது கோலிவுட்டின் டாப் ட்ரெண்டிங் மேட்டர்!