Posted in

இது என்ன மானம் கெட்ட பிழைப்பா போச்சு ? திருஷா இல்லன்ன என்ன ஒரு நயன் தாரா ரேஞ்

தமிழக அரசியல்ல இப்ப விஜய்தான் ஹாட் டாபிக். முன்னாடி எல்லாம் தவெக (TVK) கூட கூட்டணி வைக்கலாம்னு அதிமுக துடியா துடிச்சாங்க. ஆனா, விஜய் எடுத்த எடுப்பிலேயே “நான்தான் சி.எம் வேட்பாளர்”னு சொன்னதும், எடப்பாடியார் அப்டியே ஷாக் ஆயிட்டாரு. “என்னடா இது, நமக்கு வந்த சோதன”னு கடுப்பான அதிமுக, இப்ப விஜய்யை வச்சு செஞ்சுகிட்டு இருக்காங்க. ‘பில்லா’ விஜய்யை பிடிக்க முடியலைன்னு தெரிஞ்சதும், இப்ப எடப்பாடியார் குரூப் அப்படியே ரூட்டை மாத்தி ‘தல’ அஜித் பக்கம் வண்டிய திருப்புது.

சமீபத்துல நடக்குற அதிமுக மீட்டிங் எல்லாம் பார்த்தா நமக்கே ‘சிரிப்பு சிரிப்பா’ வருதுங்க. எடப்பாடியார் மேடைக்கு வந்தா, அங்க இருக்குற பசங்க டக்குனு நடிகர் அஜித்தோட போட்டோவை தூக்கிக் காட்டுறாங்க. நம்ம எடப்பாடியாரும் அதைப் பார்த்துட்டு, “அடடே.. நம்ம தல போட்டோவா? ரொம்ப சந்தோஷம்”னு பல்லக் காட்டி சிரிச்சுட்டு இருக்காரு. இது எப்டி இருக்குன்னா, ஒரு கல்யாணத்துல பொண்ணு கிடைக்கலைன்னு, அவங்க அக்கா போட்டோவை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிற மாதிரி ஒரு ஃபீல் கொடுக்குது.

இன்னொரு பக்கம், நம்ம கோயம்புத்தூர் சிங்கம் எஸ்.பி. வேலுமணி ஒரு படி மேல போய், அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தேடித்தேடிப் போய் கும்பிடு போடுறாராம். “விஜய் ரசிகர் எல்லாம் தவெக பக்கம் போயிட்டாங்க, அதனால அஜித் ரசிகர்களாவது நமக்கு ஓட்டுப் போட மாட்டாங்களா?”னு ரொம்பவே ‘ஃபீல்’ பண்ணி பேசுறாராம். “தல போல வருமா”னு பாட்டு பாடி, எப்டியாவது அஜித்தோட அந்த ‘சைலண்ட்’ ஓட்டுகளை அமுக்கிடலாம்னு அதிமுக ஒரு மரண லெவல் பிளான் போட்டுருக்கு.

ஆனா நிஜத்தை சொல்லணும்னா, அஜித் எப்போவோ “எனக்கு அரசியலே வேணாம்”னு ஒதுங்கிப் போயிட்டாரு. ஆனா, எடப்பாடியார் தலைமையிலான அதிமுக, அஜித்தோட போட்டோவை வச்சு ‘வாரிசு’ படத்துல வர்ற மாதிரி ஒரு பெரிய ஃபேமிலி பாலிடிக்ஸ் பண்ண ட்ரை பண்றாங்க. தளபதி விஜய் கொடுத்த ‘வெயிட்டான’ அடியை தாங்க முடியாம, தல அஜித்தோட ரசிகர்களாவது தங்களைக் காப்பாத்துவாங்கனு அதிமுக போடுற இந்த புது ‘கிரிஞ்சு’ வியூகம் ஒர்க் அவுட் ஆகுமான்னு பொறுத்திருந்துதான் பாக்கணும்!