Posted in

அதிசயம்… எந்த பைரசி வெப்சைட்டும் ஜன- நாயகனை வெளியிடவில்லை- எங்களுக்கும் மனச் சாட்சி உண்டு என அறிவிப்பு !

உலகிலேயே இப்படி எல்லாம் நடக்குமா என்று கேட்டால் தெரியவில்லை. அதிசயம் தான். நேற்று முன் தினம் தான் விஜய் அவர்கள், ஜனநாயகன் குறித்து முதல் தடவையாக வாய் திறந்து பேசி இருந்தார். ஆனால் இன்று ஜனநாயகன் படம் ஆன்லைனில் கசிந்துள்ளது. இதற்கு யார் காரணம் என்பது நாம் சொல்லிப் புரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு அதிசயம் நடந்துள்ளது.

பல பைரசி இணையங்களில் தமிழில் உள்ளது, குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கண், தமிழ் யோகி என்று பல இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் “அண்ணா” விஜய்க்கு நாங்கள் சப்போட்டாக இருப்போம், ஜனநாயகனை நாம் வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் தெரிவித்து இருப்பது என்னவென்றால், எங்களுக்கும் ஒரு மனச்சாட்சி உண்டு, கடமை உண்டு, அதனை நாங்கள் மீறமாட்டோம் என்பது தான்.

இந்த பைரசி வெப்சைட் உரிமையாளர்கள் சிலரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜனநாயகன் HD காப்பியை அவர்களுக்கு சென்னையில் உள்ள நபர் ஒருவர், ஈமெயில் லிங்க் மூலம் அனுப்பி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்கள். அதாவது தி.மு.க உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல் முருகன் கோஷ்டியே இதனைச் செய்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. 500 கோடி பட்ஜெட் படத்தை இப்படி நாசம் செய்து, திரைத்துறையில் வேலை செய்யும் ஆயிரம் குடும்பங்களின் வயிற்றில் அடித்து, தமிழகத் திரைத்துறையையே நாசம் செய்வது எதற்காக? எல்லாம் பாழாய்ப்போன இந்த அரசியலுக்காக.

குடும்பமே கொள்ளையடித்து, குடும்பமே ஆட்சி அமைத்து, குடும்பமாக பல கேடித்தனமான செயல்களைச் செய்யும் இந்த தி.மு.க அரசை மக்கள் அகற்றாவிட்டால், இனி என்ன எல்லாம் நடக்குமோ தெரியாது. இன்று விஜய்க்கு நடந்த அதே கொடுமை நாளை உங்கள் பிள்ளைகளுக்கும் நடக்கும். அதுவே நிச்சயம். பெரும்பாலும் வெளிநாட்டில் உள்ள ஈழத் தமிழர்கள் சிலரால் தான் இந்த பைரசி இணையங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் கூட நீதி நியாயம் பார்த்து விஜயின் படமான ஜனநாயகனை, வெளியிடவில்லை. ஈழத் தமிழர்கள் கூட இன்று விஜய்க்கு ஆதரவாக தான் இருக்கிறார்கள். திட்டமிட்டு இந்த பைரசி இணையங்களுக்கு ஜனநாயகன் HD காப்பியை அனுப்பிய நபர்கள் மீது தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

இந்த 500 கோடி இழப்புக்குத் தணிக்கை குழு பொறுப்பை எடுக்குமா? உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்வது நல்லது. வேண்டுமென்றே திட்டமிட்டு, ஜனவரி 9 வெளியாகவேண்டிய திரைப்படத்தை இழுத்தடித்த மோடி, ஒரு கட்டத்தில் இதனை வைத்தே பேரம் பேசினார். BJPல் இணைய அமித் ஷா கடுமையாக நிர்பந்தித்தார். ஆனால் விஜய் அசையவில்லை. இன்று திரைப்படத்தைத் தணிக்கை குழு உதவியோடு, HD காப்பியாக வெளியிட்டுள்ளார் உதயநிதி. இது தான் இன்றைய தமிழகம்!