Posted in

சிக்கியது இந்திய Sensor Board: வீடியோவில் EDIT-14012026 ஆதாரம் வெளியானது

ஜனநாயகன் திரைப்படம் கடந்த 10-ம் தேதி மதியம் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பல தமிழ் சினிமாத் திருட்டு இணையதளங்கள் கூட இந்தத் திரைப்படத்தை வெளியிடவில்லை; அவர்கள் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறார்கள். எப்படியாவது இந்தப் படத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக, கொரிய மற்றும் சீன இணையதளங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இணையத்தில் கசிந்துள்ள இந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் HD தரத்தில் உள்ளதோடு, அதில் “EDIT-14012026” என்ற குறியீடும் உள்ளது. அதாவது 14.01.2026 அன்று தணிக்கை குழுவிற்காக (Censor) எடிட் செய்யப்பட்ட நகல் (Copy) தான் இது. தயாரிப்பு நிறுவனம் தணிக்கை குழுவிடம் ஒப்படைத்த அதே எடிட் செய்யப்பட்ட நகல் தான் தற்போது கசிந்துள்ளது.

இதற்கான ஆதாரத்தையும் நாம் இங்கே இணைத்துள்ளோம். இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அந்தப் பிரதியை யாரோ மீண்டும் எடிட் செய்திருக்கிறார்கள். படத்தின் காட்சிகளைத் தேவையில்லாமல் வெட்டி ஒட்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஒரு சுமாரான படம் போல உருமாற்றியுள்ளனர். இதன் மூலம், இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு “படம் அவ்வளவு நன்றாக இல்லை” என்ற எண்ணத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதனால் தேர்தல் முடிந்து ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் வெளியானாலும், அதைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதன் பிறகு, விஜய்யின் கடைசிப் படம் படுதோல்வி என்று திமுக ஆதரவு ஊடகங்கள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யும். விஜய்யை அரசியல் ரீதியாக வீழ்த்த எப்படியெல்லாம் சதித் திட்டங்களைத் தீட்டுகிறார்கள் என்று பாருங்கள்! இதற்கு இந்தியத் தணிக்கை குழுவே முழுப் பொறுப்பேற்க வேண்டும்; இல்லையென்றால் படத்தை உடனடியாக வெளியிட அனுமதி அளிக்க வேண்டும். உண்மையில் நாம் ஒரு “ஜனநாயகம்” அற்ற சூழலில் தான் இருக்கிறோம் என்பதே கசப்பான உண்மை!