Posted in

“ஜன நாயகன் லீக்” 21 பேர் மீது அதிரடியாக FIR போட்ட தமிழக பொலிசார் !

இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். படத்தின் மிக முக்கியமான க்ளைமாக்ஸ் மற்றும் டைட்டில் கார்டு காட்சிகள் கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக 21 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம், வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்த சம்பவம் ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் உலுக்கியுள்ளது. தளபதி விஜய் தனது அரசியல் பயணத்திற்காகத் திரையுலகை விட்டு விலகும் சூழலில், அவரது கடைசிப் படத்திற்கு இப்படி ஒரு சதி நடந்திருப்பது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையரங்குகளில் கொண்டாட்டமாகப் பார்க்க வேண்டிய காட்சிகளைச் சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்கள், “எங்கள் தலைவனுக்கு இப்படியொரு துரோகமா?” என்று கண்ணீருடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். படத்தின் மிக முக்கியமான க்ளைமாக்ஸ் மற்றும் டைட்டில் கார்டு காட்சிகள் கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக 21 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்சார் போர்டு மூலம் தான் படம் கசிந்திருக்கும் என்று கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள சி.பி.எப்.சி (CBFC), “எங்கள் தரப்பில் எந்தத் தவறும் நடக்கவில்லை; மார்ச் 17-ஆம் தேதியே தயாரிப்பு நிறுவனத்திடம் அனைத்துத் தரவுகளும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன” என்று விளக்கமளித்துள்ளது.

சினிமா வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் விஜய்க்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருவதுடன், திருட்டுத்தனமாகப் படத்தைப் பார்ப்பது ஒரு கலைஞனின் உழைப்பைக் கொல்வதற்குச் சமம் என்று எச்சரித்துள்ளனர். “சதிவலைகளைத் தாண்டி, ஜனநாயகம் வெல்லும்” என்ற நம்பிக்கையில் திரையரங்குகளை நோக்கித் தளபதி ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.