1979-ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று, கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள கிளீவ்லேண்ட் ஆரம்பப் பள்ளிக்கு எதிரே இருந்த தனது வீட்டிலிருந்து, 16 வயது சிறுமி பிரெண்டா ஆன் ஸ்பென்சர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். கிறிஸ்மஸ் பரிசாகத் தனது தந்தை வழங்கிய துப்பாக்கியால், பள்ளியின் கதவைத் திறக்க வந்த முதல்வர் மற்றும் துப்புரவுப் பணியாளரை அவர் சுட்டுக் கொன்றார். மேலும் 8 குழந்தைகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியைப் படுகாயப்படுத்தினார். ஏன் இந்தச் செயலைச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, “எனக்குத் திங்கள் கிழமை பிடிக்காது, நாளை உற்சாகப்படுத்தவே இப்படிச் செய்தேன்” என்று அவர் அளித்த பதில் உலகையே உறைய வைத்தது.
இந்தக் கொடூரமான சம்பவம் “I Don’t Like Mondays” என்ற புகழ்பெற்ற பாடலுக்குத் தூண்டுகோலாக அமைந்ததுடன், பிரெண்டா ஸ்பென்சரை ஒரு “தீமையின் சின்னமாக்கியது” (Icon to Evil). தற்போது 62 வயதாகும் அவர், கலிபோர்னியா பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அண்மையில் பிப்ரவரி 2025-இல் நடைபெற்ற அவரது ஏழாவது பரோல் (Parole) விசாரணையிலும், அவர் விடுதலையாவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவர் தனது செயலுக்கு முறையான வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும், தனது குற்றத்தின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் பரோல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஆய்வுகள் மற்றும் அவரைச் சந்தித்த நிபுணர்களின் கருத்துப்படி, நவீன காலப் பள்ளித் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு பிரெண்டா ஒரு முன்னோடியாக (Mother of School Shootings) மாறிவிட்டார். அவரைச் சந்தித்த ஒரு எழுத்தாளர், “நான் பல துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைச் சந்தித்துள்ளேன், ஆனால் பிரெண்டா ஒரு தனித்துவமான தீமையின் வடிவம்” என்று குறிப்பிட்டுள்ளார். சிறையில் அவர் பிற கைதிகளுடன் பழகும் விதம் மற்றும் தனது கடந்த காலக் குற்றங்களைப் பற்றிப் பேசும் விதம் இன்றும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தன் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குடும்பச் சூழலே தனது இந்தச் செயலுக்குக் காரணம் எனப் பிரெண்டா தற்போது கூறினாலும், பாதிக்கப்பட்டவர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர். “நினைத்தாலே நடுக்கம் தரும் அந்த ரத்த ஞாயிறு இன்றும் என் மனக்கண்ணில் ஆடுகிறது” என்று உயிர் தப்பியCam Miller என்பவர் பரோல் விசாரணையில் தெரிவித்தார். அடுத்த பரோல் விசாரணை 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்க வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறியுள்ள இந்தப் ‘பிளடி மண்டே’ (Bloody Monday) சம்பவம் இன்றும் ஒரு பாடமாகவே நீடிக்கிறது.