Posted in

விஜய் கடுப்பாகி பார்த்த ஒற்றைப் பார்வை- டூ-வீலரில் துரத்திய இளைஞர்கள் பின் வாங்கினார்கள்

📅 வெளியானது: April 18, 2026

சென்னையில் இன்று TVK தலைவர் விஜய் அவர்கள், பெரம்பூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்த வேளையில், அவர் சென்ற வெள்ளை நிற வேனைப் பின்தொடர்ந்து பல இளைஞர்கள் செம ஆர்வத்தில் போய்க்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர் பயணித்த வேனுக்கு மிக அருகாமையில் இரண்டு இளைஞர்கள் டூ-வீலரில் செல்ல, கடுப்பான விஜய் அவர்களைத் திரும்பி ஒரு பார்வை பார்க்க, அந்த ரியாக்‌ஷனைப் பார்த்ததும் அவர்கள் அப்படியே ஓரமாக ஒதுங்கிவிட்டார்கள். தளபதி செம காண்டாகிவிட்டார் என்பது அந்தப் பார்வையிலேயே அப்பட்டமாகத் தெரிந்தது.

மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி விஜய் அடிக்கடி கேட்டுக்கொள்கிறார். வயதான பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் தமது பிரச்சாரக் கூட்டங்களுக்கு வர வேண்டாம் என்றும், தனது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் ஃபாலோ பண்ண வேண்டாம் என்றும் விஜய் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், நம்ம பசங்கதான் இதைக் கேட்டபாடில்லை. விஜய் மீது உள்ள ஈர்ப்பால் தங்களையும் அறியாமல் வாகனத்தை வேகமா ஓட்டி பின் தொடர ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதுவே கடைசியில் பெரும் சிக்கலில் போய் முடிகிறது. இதுவரை பல இடங்களில் விஜய்யின் வாகனத்தோடு மோதி பல இளைஞர்கள் காயமடைந்துள்ளார்கள்; நல்ல வேளையாக உயிர்ச்சேதம் ஏதும் நடக்கவில்லை. சில இடங்களில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்வதால், அவர்களுக்கு இடையே விபத்துகள் ஏற்படுகிறது. இதைக் கண்டதும் நம்ம மீடியாக்கள் சும்மா விடுவதே இல்லை.

சன் TV மற்றும் தினகரன் போன்ற திமுக ஆதரவு ஊடகங்கள், இந்தச் சம்பவங்களை மட்டுமே டார்கெட் செய்து முக்கியச் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன. இதனால் விஜய் எங்கே சென்றாலும் விபத்து நடக்கும் என்ற ஒரு மாயையை (Narrative) திமுக தரப்பு பரப்பி வருகிறது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து இது போன்ற செய்திகளைப் பரப்புவதில் திமுக ஆதரவு ஊடகங்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் இளைஞர்களோ இதைப் பற்றி சற்றும் யோசிப்பதே இல்லை, தளபதியைச் சுற்றித் தான் கிடக்கிறார்கள்.