விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. புகழுடன் இவர் செய்த சேட்டைகளும், இவர்களது காம்போவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு ‘நாய் சேகர்’, ‘யுகி’ போன்ற படங்களில் நாயகியாக நடித்து வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார்.
ஆனால், கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சையில் இருந்த பவித்ரா, சமூக வலைதளங்களில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகத் தவறான வதந்திகள் பரவிய போது, “நான் தீவிரமான உடல்நலப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறேன்” என உருக்கமாகப் பதிலளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது சிகிச்சைக்குப் பிறகு மெல்ல மெல்லக் குணமடைந்து வரும் பவித்ரா, மீண்டும் பழைய உற்சாகத்துடன் வலம் வரத் தொடங்கியுள்ளார். குறிப்பாகத் தமிழகத்தில் வாட்டி வதைக்கும் கோடை வெயிலைச் சமாளிக்கத் தனது தோழிகளுடன் சுற்றுலா சென்ற அவர், அங்குள்ள நீச்சல் குளத்தில் ஜாலியாகக் குளியல் போடும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
“வெயிலைத் தாங்கவே முடியல” என்ற ரேஞ்சில் அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளன. மீண்டும் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் பவித்ராவைக் கண்ட ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளைக் குவிப்பதோடு மீண்டும் திரையில் பார்க்க ஆவலோடு காத்திருப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.
