தமது கடல் எல்லை வழியாக செல்லும், சர்வதேச எண்ணைக் கப்பல்களை தாக்கி அழிக்க எம்மிடம் புதிய ஒரு படைப் பிரிவு உள்ளது. அது தயார் நிலையில் இருக்கிறது அதனால் எம்மிடம் பூச்சாண்டி வேலை ஒன்றும் காட்ட வேண்டாம் என ஈரான் சற்று முன்னர் கடுமையாக எச்சரிக்கை ஒன்றை அமெரிக்காவுக்கு விடுத்துள்ளது. இதனால் புதிய பதற்றம் தோன்றியுள்ளது. என்னடா இது வம்பா போச்சே என்று ரம் யோசனை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்…
FULL_STORY: டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்தம் நாளை முடிவுக்கு வரவுள்ள நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. பேச்சுவார்த்தை மேசையை தங்களை அடிபணிய வைக்கும் இடமாக ட்ரம்ப் கற்பனை செய்வதாகவும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, போர்நிறுத்தம் முறிந்தால் போர் முனையில் இதுவரை பார்த்திராத ‘புதிய கார்டுகளை’ (New Cards) இறக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு விரைந்துள்ளார். ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோரும் இந்த உயர்மட்டக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். புதன்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்குமா என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. அமெரிக்காவின் முற்றுகை மற்றும் மிரட்டல்கள் நீங்கும் வரை பேச்சுவார்த்தையில் அமரப் போவதில்லை என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளது.
இதற்கிடையில், ஈரானின் சரக்குக் கப்பலை அமெரிக்கக் கடற்படை சிறைபிடித்ததைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. “ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை இந்த கடல் வழி முற்றுகையை நீக்கப்போவதில்லை” என ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த முற்றுகையினால் ஈரான் தினசரி 500 மில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என ட்ரம்ப் கூறியிருப்பது, மீண்டும் ஒரு பயங்கரமான ஏவுகணைத் தாக்குதலுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் போர்ச் சூழல், தற்போது பாகிஸ்தான் கைகளில் வந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானின் மின் கட்டமைப்பு மற்றும் முக்கிய நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஈரானின் ‘புதிய வியூகம்’ அமெரிக்காவின் நவீன ஆயுதங்களைச் சமாளிக்குமா என்பது உலக நாடுகளின் உன்னிப்பான கவனிப்பில் உள்ளது. அடுத்த 24 மணிநேரம் உலக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.