கணவரோடு பிரச்சனை என்று பொலிஸ் நிலையம் வந்த பெண்ணுக்கு, அவர் இல்லை என்றால் என்ன நான் இருக்கிறேன் என்று மிகவும் ஆபாசமாக வாட்ஸ் அப் போட்ட காவல் அதிகாரி. அடேங்கப்பா என்ன தான் நடக்கிறது ? TVK ஆட்சியில் இருக்கு என்கிற பயம் கொஞ்சமாவது இவங்களுக்கு இருக்கா இல்லையா ?
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணிடம், வாட்ஸ்அப்பில் ஆபாசமாக பேசிய தலைமை காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் அக்னிமுத்து. இவர் தட்டாபாறை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பப் பிரச்சனை காரணமாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட தலைமை காவலர் அக்னிமுத்து, புகார் மனுவில் இருந்த பெண்ணின் செல்போன் எண்ணைக் குறித்து வைத்துள்ளார். பின்னர், அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தொடர்பு கொண்டு, அந்தப் பெண்ணிடம் மிகவும் அசிங்கமான முறையில் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தலைமை காவலர் அக்னிமுத்து ஆபாசமாகப் பேசிய ஆடியோ ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகப் பரவியது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு தலைமை காவலர் அக்னிமுத்துவை பணியிடை நீக்கம் (Suspension) செய்து மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். கடந்த மாதம் இதே காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆய்வாளர் திலீபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது