சிம்ரனுக்கு Propose பண்ண போகும் போது ….வேறொரு நடிகர் – அப்பாஸ் புலம்பல்!

சிம்ரனுக்கு Propose பண்ண போகும் போது ….வேறொரு நடிகர் – அப்பாஸ் புலம்பல்!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை ஆன நடிகை சிம்ரன் 2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகராக மார்க்கெட்டை பிடித்து வைத்திருந்தார். தொடர்ச்சியாக இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக நடித்து தனது மார்க்கெட்டை உச்ச அந்தஸ்தில் வைத்துக் கொண்டிருந்தார்.

சிம்ரனின் நடிப்பு மற்றும் அவரது நடனம் இன்று வரை ரசிகர்களால் மெய்மறந்து பார்க்க வைக்கும் அந்த வகையில் மிகச் சிறந்த நடிகையாக தென்பட்டு வந்தார். இதனிடையே இவர் அப்பாசுடன் கிட்டத்தட்ட மூன்று திரைப்படங்களை இணைந்து நடித்திருக்கிறார்.

சமீபத்திய பேசி ஒன்றில் நடிகர் அப்பாஸிடம், நீங்கள் சிம்ரன் மீது காதல் வயப்பட்டது உண்மையா என கேட்டதற்கு ஆமாம், அது கிட்டத்தட்ட உண்மைதான். காரணம் நாங்கள் இருவரும் மூன்று திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தோம். நெருக்கமாக நடித்த போது எங்களுக்குள் ஈர்ப்பு ஏற்பட்டது. நான் சிம்ரனை புரபோஸ் செய்யலாம் என்று சென்றேன்.

அதற்குள் வேறொரு நடிகர் புகுந்து விட்டார். அவர் யார் என்று பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போ அவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆயிடுச்சு அதனால் வேண்டாம் என்று அப்பாஸ் கூற மறுத்தார். இதையடுத்து சிம்ரனை காதலித்த அந்த இன்னொரு ஹீரோ யார் என்பதை நெட்டிசன்ஸ் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.