கங்கனாவை அறைந்த பெண் காவலர் – பாராட்டிய சேரன்!

கங்கனாவை அறைந்த பெண் காவலர் – பாராட்டிய சேரன்!

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்தவர் தான் பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத். அந்த படத்தை தொடர்ந்து தலைவி மற்றும் குயின் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் .

இந்நிலையில் கங்கனா அண்மையில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் போட்டியிட்டு களமிறங்கி 74755 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி கண்டார் இப்படியான நேரத்தில் நேற்று கங்கனா சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் குல்விந்தர் கௌர் என்பவர் நடிகை கங்கனாவை கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்கள் முழுக்க வைரல் ஆகியது. பிரபலமான நடிகையை பெண் போலீசார் அடித்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதால். அந்த பெண் போலீசாரை பிடித்து விசாரித்து கேட்டதில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளே காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா கூறியிருந்தார்.

அதனால் தான் அவரை ஓங்கி அடித்தேன் என விசாரணையில் பெண் போலீஸ் குவிந்தர் கௌர் தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லை. அதுமட்டுமில்லாமல் விவசாயியான என்னுடைய அம்மாவை அவர் மிகவும் தரகுறைவாக பேசினார். அதனால் ஓங்கி அடித்தேன் எனவும் கூறி இருந்தார். இது தொடர்பாக பிரபல இயக்குனரான சேரன் தனது எக்ஸ் தலத்தில்…

இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off.. என அந்த பெண் போலீசாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.