நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க இவ்வளவு சம்பளமா? கவினுக்கு அடித்த ஜாக்பாட்!

நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க இவ்வளவு சம்பளமா? கவினுக்கு அடித்த ஜாக்பாட்!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது சினிமா வாழ்க்கை தொடங்கியவர் தான் நடிகர் கவின். அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் சீரியல் ஹீரோவாக நடித்து ஓரளவுக்கு மக்களின் மனதில் இடம் பிடித்தார். இத இதனிடையே தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் தேடிய கவினுக்கு சீரியல் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து வந்தது.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அந்த நிகழ்ச்சியை மிகவும். சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார். அதையடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். முன்னதாக நட்புன்னா என்னன்னு தெரியுமா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு லிப்ட் திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி குவித்தார். கவினின் நடிப்பு மிகப்பெரிய அளவில் அந்த படத்தில் பேசப்பட்டது. அடுத்ததாக தற்போது அவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக நடிகராக இடத்தை பிடித்திருக்கிறார்.

தொடர்ந்து நல்ல திரைப்படங்களின் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நயன்தாராவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். லோகேஷ் கனகராஜ். உதவி இயக்குனராகப் பணியாற்றிய விஷ்ணு இடவன் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நடிக்க கவினுக்கு ரூபாய் 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிர வைத்திருக்கிறது.