அஜித்திற்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்…. அதிரடி அப்டேட்!

அஜித்திற்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்…. அதிரடி அப்டேட்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் அஜித் தற்போது தனது 63வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அது மட்டும் இல்லாமல் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வந்த அஜித் பின்னர் அந்த திரைப்படம் சற்று தாமதமானதால் அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்த வருகிறார். ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஹீரோயின் இன்னும் தேர்வு செய்யவில்லையாம். அது தொடர்பாக பல ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த லிஸ்டில் கீர்த்தி சுரேஷின் பெயர் முதலாவது ஆக அடிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை கீர்த்தி சுரேஷ் மட்டும் இந்த படத்தில் கமிட்டானால் அஜித்துடன் ஜோடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.