உங்களுக்கே ஓவரா தெரியல…? ஒரு படத்துக்கு இத்தனை கோடியா?

உங்களுக்கே ஓவரா தெரியல…? ஒரு படத்துக்கு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத திரைப்படங்களே இல்லை என்ற அளவுக்கு எந்த திரைப்படங்கள் எந்த ஹீரோவின் படங்கள் வெளியானாலும் அதில் வடிவேலுவின் காமெடி காட்சி கட்டாயம் இடம் பெற்றுவிடும்.

அந்த அளவுக்கு வடிவேலுவை தாண்டி வேறு யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார். வைகை புயல் என மக்களால் மிகப்பெரிய அளவில் அறியப்பட்டார். இவரது பாடி லாங்குவேஜும், எதார்த்தமான பேச்சும், காமெடியான நடிப்பும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இதனிடையே அவர் தலைக்கனத்தில் சில ஆடி வந்ததாக பலர் வடிவேலு மீது அடுக்கடுக்கான விமர்சனம் செய்து வந்தனர். பின்னர் மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் ஒரு நல்ல கம்பேக் கொடுத்திருந்தார் வடிவேலு.

இந்நிலையில் தற்போது வடிவேலு குறித்த ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது. பிரபலமான இயக்குனர் ஒருவர் வடிவேலுவிடம் கதை கூறியிருக்கிறார். அந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு வடிவேலு ரூ. 6 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ,7 முதல் 8 கோடி தானாம். வடிவேலின் சம்பளத்தை கேட்டு அந்த இயக்குனர் ஆடிப்போய்விட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.