எய்ட்ஸ் நோய் வதந்தி பரப்பியது இவர் தான் – நடிகர் மோகன் வேதனை!

எய்ட்ஸ் நோய் வதந்தி பரப்பியது இவர் தான் – நடிகர் மோகன் வேதனை!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் பிரபலமான ஹீரோவாக இருந்து வந்தவர் தான் மைக் மோகன். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் பழமொழி திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் ஹிட் நடிகராக வலம் வந்து கொண்டு இருந்தார்.

தமிழில் இதுவரை 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்த சமயத்தில் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் பரவி விட்டது என கூறி வதந்தி பரவி அவரது கெரியரையே காலி செய்து விட்டது.

இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் தன்னைக் குறித்து வெளியான வதந்தி செய்து குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது, நான் சினிமாவில் இருந்து விலகி இருந்த காலகட்டத்தில் பல்வேறு வதந்திகள் வந்தது. அவை தன்னை அதிகம் வேதனை படுத்தியது என்றும் கூறி இருக்கிறார்.

எனக்கு எயிட்ஸ் நோய் வந்துவிட்டது என செய்தி பரப்பி விட்டார்கள். அதனால் எனக்கும், குடும்பத்தினருக்கும் பெரிய வேதனை கொடுத்தது. என்னிடம் வந்து பேட்டி எடுப்பவர்கள் ‘எயிட்ஸ் இல்லை’ என சொல்லுங்க என கேட்பார்கள். நீங்களே எதையோ எழுதிடுவீங்க, அது இல்லை என நான் விளக்கம் சொல்லனுமா என கோபமாக கேட்பேன் என மைக் மோகன் கூறியிருக்கிறார். மோகனுக்கு எய்ட்ஸ் நோய் வதந்தி இருப்பதாக கூறியதே பிரபல நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தான் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.