“கில்லி” படத்தை தொடர்ந்து ரீ- ரிலீஸ் ஆகப்போகும் விஜய்யின் மெகா ஹிட் திரைப்படம்!

“கில்லி” படத்தை தொடர்ந்து ரீ- ரிலீஸ் ஆகப்போகும் விஜய்யின் மெகா ஹிட் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர் ஆன விஜய் தற்போது நம்பர் ஒன் நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்த வருகிறார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்க்கொண்டிருக்கிறார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இதனிடையே அண்மையில் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்ட திரைப்படம் தான் கில்லி.

இந்த திரைப்படம் அப்போதே சுமார் ரூ.8 கோடி பட்ஜெட்டில் தயாராகி கிட்டத்தட்ட 50கோடி வரை வசூலித்ததாம். ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ் திரைப்படம் கில்லி தான் என பெரும் பெயர் பெற்றது. இந்நிலையில் தற்போது ரிலீசான இப்படத்தை மீண்டும் ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர். கிட்டத்தட்ட ரூ.30 கோடி வரை வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் கில்லி படத்தை தொடர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி துப்பாக்கி திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாம். இதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.