ரஜினியின் தளபதி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

ரஜினியின் தளபதி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த திரைப்படம் தான் தளபதி. இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்முட்டி , அரவிந்த்சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தார்கள் .

இந்த படம் வெளியாகி அந்த காலத்திலேயே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக தளபதி திரைப்படம் இருக்கிறது. இந்நிலையில் தளபதி திரைப்படம் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தளபதி படத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது பிரபல தெலுங்கு நடிகர்நாகார்ஜுனா தானாம். சில காரணத்தால் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்று இயக்குனர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இயக்குனர் முரளி அப்பாஸ், ரஜினியின் தளபதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.