திரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகர்!

திரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கி வருபவர் தான் நடிகை திரிஷா. தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நடித்து வருகிறார். 2000 காலகட்டத்தில் இவரது நடிப்பு பயணம் ஆரம்பித்து மிக பெரிய நட்சத்திர நடிகையாக பேசப்பட்டு வந்தார். இதனடி அவர் சில காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

காரணம் அவருக்கு வருண் என்ற தொழில் அதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் திருமணம் நின்று போனது. இதனால் அவர் திரைப்படங்களில் சில ஆண்டுகள் நடிக்காமல் பின்னர் மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த 96 திரைப்படத்தில் ஜானு எனக்கு கேரக்டரில் திரிஷா நடித்திருந்தார்.

இந்த படத்தில் திரிஷாவுக்கு முத்தம் கொடுக்க விஜய் சேதுபதி மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விஜய் சேதுபதி திரிஷா பிரிந்துசெல்வார். அந்த சமயத்தில் இயக்குனரான பிரேம்குமார் த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்குமாறு விஜய் சேதுபதியிடம் கூறினாராம் .

ஆனால் விஜய் சேதுபதி அதற்கு நோ என்றால் நோ தான் இந்த காட்சியில் அவர்கள் அவர்களாகவே பிரிந்து செல்வது தான் நல்லது. ஒரு வேலை திரிஷாவுக்கு நான் முத்தம் கொடுத்து விட்டால் எல்லோரும் அவர்களுடைய எக்ஸ் காதலியை சந்திக்கும் போது முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஒரு உணர்ச்சியில் ஈடுபடுவார்கள். அதனால் வேண்டாம் என திரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்தாராம் விஜய் சேதுபதி. அத்துடன் விஜய் சேதுபதி பல நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதையே தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.