பெண்களை அந்த மாதிரி மோசமாக காட்டுறாங்க…. நடிகை நிகிலா விமல் காட்டம்!

பெண்களை அந்த மாதிரி மோசமாக காட்டுறாங்க…. நடிகை நிகிலா விமல் காட்டம்!

மலையாள திரைப்பட நடிகையான நிகிலா விமல் மலையாளம் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் கேரளாவில் தொலைக்காட்சி தொடரில் நடித்து தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. முதன்முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டில் பாக்யதேவதா என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக திரையுலைகள் அறிமுகமானார்.

நிகிதா தொடர்ந்து 2016 வெற்றிவேல் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது. பின்னர் தொடர்ந்து கிடாரி , தம்பி உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் சரத்குமார் அசோக் செல்வன் நடித்த வெளிவந்த போர் தொழில் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

தற்போது இரண்டு மலையாள படங்களை கைவசம் வைத்திருக்கும் நிகிலா விமல் ஒரு தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகளை தேவையில்லாமல் படங்களில் நடிக்க வைப்பது மிக தவறு. கதைக்கு தேவைப்பட்டால் மட்டும் நடிகைகளை நடிக்க வையுங்கள் இல்லையென்றால் தேவையே இல்லாமல் நடிகைகளை ஒரு பொம்மை போன்று காட்சிப்படுத்துவது அவசியமே இல்லை.

இது நல்லதே இல்லை எனக் கூறியிருக்கிறார் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் தயவு செய்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் வெளிவந்த ஆவேசம் மஞ்சுமல் பாய்ஸ் போன்ற திரைப்படங்களில் தேவையில்லாமல் பெண் கதாபாத்திரத்தை தவிர்த்து இருக்க வேண்டும் என அவருக்கு ஒரு இருக்கிறார்.