தங்கை தான் எல்லாத்துக்கும் காரணமா? ஜிவி பிரகாஷ் விவாகரத்தில் திடீர் திருப்பம்!

தங்கை தான் எல்லாத்துக்கும் காரணமா? ஜிவி பிரகாஷ் விவாகரத்தில் திடீர் திருப்பம்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்தவர்கள் தான் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி. ஜி வி பிரகாஷ் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், சைந்தவி பின்னணி பாடகி ஆகவும் இருந்து வந்தார்கள்.

மிகச் சிறந்த காதலர் காதல் ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டு பின்னர் அன்வி என்ற அழகிய அழகிய மகளை பெற்றெடுத்தார்கள். மகளுக்கு தற்போது நான்கு வயதாகும் நிலையில் இவர்கள் இருவரும் திடீரென விவாகரத்தை அறிவித்து பேரதிர்ச்சி கொடுத்தனர். இவர்களின் விவாகரத்துக்கு பலவிதமான செய்திகள் வதந்தியாக வெளிவந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கு முக்கிய காரணமே அவரது தங்கைதான் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பர் ஒருவர் இதை கூறி இருக்கிறார். பொதுவாகவே ஜிவி பிரகாஷ் வீட்டிற்கு அவரது மாமியார் வீட்டில் இருந்து யாரேனும் வந்தால் சரியாக கவனிக்க மாட்டாராம்.

அதையே சைந்தவியும் செய்து வந்துள்ளார். ஜிவி பிரகாஷின் வீட்டிலிருந்து யாரேனும் வந்தால் இவர் சரியாக கவனிக்க மாட்டாராம் இப்படித்தான் முதலில் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. பின்னர் அதுவே நாளடைவில் பெரிய காரணமாகிவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.