“உங்கொப்ப மவனே வாடா” Disneyland’ல் மகன்களுடன் விக்னேஷ் சிவன்!

“உங்கொப்ப மவனே வாடா” Disneyland’ல் மகன்களுடன் விக்னேஷ் சிவன்!

நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தோடு வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் சில மதத்திலே இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் தனது குழந்தைகளுடன் Disneyland’ற்கு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முன்னதாக விக்னேஷ் சிவன் நடிகர் சிம்புவை வைத்து போடா போடி திரைப்படத்தை இயக்கிய போது அப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் இதே டிஸ்னி லேண்டில் தான் படம் ஆக்கி இருப்பார். “உங்க அப்பன் மவனே வாடா” என்ற அந்த பாடல் இன்று வரை பலரது ஃபேவரிட் லிஸ்டில் இருக்கும்போது தற்போது இந்த விக்னேஷ் சிவன் ரியலாகவே தனது மகன்களுடன் சென்று அதே இடத்தில் தற்போது பல வருடங்கள் கழித்து எடுத்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.