நயன்தாரா படத்தை தட்டி தூக்கிய திரிஷா… அம்மனாக அதகளம் செய்யப்போறார்!

நயன்தாரா படத்தை தட்டி தூக்கிய திரிஷா… அம்மனாக அதகளம் செய்யப்போறார்!

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனத்தை செலுத்தி கதை தேர்வில் மிகவும் கவனமாக இருப்பவர்தான் நடிகை நயன்தாரா. ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கேரக்டர் எந்த அளவுக்கு அழுத்தமானதாக இருக்கிறது என்பதை பார்த்து தான் அவர் படங்களில் நடிக்கவே ஒப்பந்தம் செய்வார்.

அப்படித்தான் ஆர்ஜே பாலாஜி மற்றும் என்ஜே சரவணன் இணைந்து இயக்கி வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் . அந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். காமெடி கதை களத்துடன் சென்டிமென்ட் உள்ளிட்ட அனைத்தும் அடங்கிய இந்த திரைப்படம் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக நயன்தாராவை வேறு ஒரு கோணத்தில் இந்த படத்தில் பார்க்க முடிந்தது.

ஊர்வஷி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர் .இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும். அதற்கான வேலைகள் தற்போது மும்முறமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்க வில்லையாம். அவருக்கு பதிலாக நடிகை திரிஷா தான் அம்மன் வேடத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகியிருக்கிறது. இருந்தாலும் நயன்தாரா நடித்த அந்த ரோலில் திரிஷா பக்கவாக பொருந்துவாரா என்பது ஒரு சின்ன சந்தேகம் இருந்தாலும், பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் நடித்தவர் திரிஷா இதில் நடிக்க மாட்டாரா? என அவரது தீவிர ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.