கார் டிக்கியை Open பண்ணுங்க… போலீசிடம் வசமா சிக்கிய நிவேதா பெத்துராஜ் – வைரல் வீடியோ!

கார் டிக்கியை Open பண்ணுங்க… போலீசிடம் வசமா சிக்கிய நிவேதா பெத்துராஜ் – வைரல் வீடியோ!

மதுரையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் துபாயில் சென்று செட்டில் ஆனவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ் . அதன் பிறகு இவர் மாடலிங் மற்றும் கார் ரேசிங் உள்ளிட்டவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்து வந்தபோது கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அந்த திரைப்படத்தில் அவரின் மிகச் சிறந்த நடிப்பு எல்லோரது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமான நடிகையாக மக்கள் மனதில் இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், டிக் டிக் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இவர் நடித்து புகழ்பெற்றார் .

இதனிடையே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அவர் காதல் கிசுகிசுக்கப்பட்டு பல சர்ச்சைகளை சிக்கி அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார் இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், ஐதராபாத்தில் நிவேதா பெத்துராஜின் காரை சோதனை இட வேண்டும் என காவல்துறையினர் அவரிடம் கேட்டுள்ளனர்.

ஆனால், அதற்கு அனுமதி மறுத்த நிவேதா பெத்துராஜ் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளது அந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்தா போலீசாரின் போனை அடாவடி செய்து தட்டி உடைகிறார். அந்த காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது ஏதெனும் படத்தின் ப்ரோமஷனுக்காக எடுத்திருக்கலாம் என பேசி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ: