கர்ணன் பட நடிகைக்கு விரைவில் திருமணம்… ;மாப்பிள்ளை யார் தெரியுமா?

கர்ணன் பட நடிகைக்கு விரைவில் திருமணம்… ;மாப்பிள்ளை யார் தெரியுமா?

நயன்தாரா , அசின், அமலாபால் , இப்படி தொடர்ச்சியாக நட்சத்திர நடிகைகள் பல பேர் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு படையெடுத்து இங்கு மிகப்பெரிய உச்சத்தை தொட்டுவிட்டார்கள் அந்த லிஸ்டில் மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தான் நடிகை ரெஜிஸா விஜயன்.

இவர் தமிழில் கர்ணன், ஜெய் பீம், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்களில் மிக முக்கியமான அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். எதார்த்தமான நேச்சுரலான நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .

குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாகவும் மிகப்பெரிய அடையாளத்தை இவருக்கு தேடி கொடுத்தது. இந்த நிலையில் ரெஜிஸா விஜயனுக்கு பிரபல ஒளி பதிவாளரான டோபின் தாமஸ் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவர்கள் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள் . இவர்களுக்கு இராசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.