ஆயிரத்தில் சம்பளம் வாங்கிய சந்தோஷ் நாராயணன்….. சொத்து மதிப்பு இப்போ எத்தனை கோடி?

ஆயிரத்தில் சம்பளம் வாங்கிய சந்தோஷ் நாராயணன்….. சொத்து மதிப்பு இப்போ எத்தனை கோடி?

தென்னிந்திய சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக பார்க்கப்பட்டு வருபவர் தான் சந்தோஷ் நாராயணன். இவர் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர இசை அமைப்பாளர் என்ற ரேஞ்சிற்கு வளர்ந்து விட்டார். குறிப்பாக இவரது இசையில் ஒரு தனித்துவம் இருப்பதால் தான் ரசிகர்கள் பெரிதும் விரும்பி பார்க்க துவங்கினர்.

முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணனுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்க பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, பில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் இசை அமைத்திருக்கிறார். இது தவிர தெலுங்கு மொழி திரைப்படங்களுக்கும் அவர் தொடர்ந்து இசையமைத்த வண்ணம் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணனின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது அதன்படி, ஆரம்பத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கி வந்த சந்தோஷ் நாராயணன் 5 வருடத்தில் ரூ. 25 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெரும் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். இப்போது ஒரு படத்துக்கு ரூ. 1 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அத்துடன் பிரம்மாண்ட வீடு, சொகுசு கார்கள், ஸ்டூடியோ என மொத்தமாக சேர்த்து அவரது சொத்து மதிப்பு ரூ. 21 கோடி முதல் ரூ. 25 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.