கணவர் எட்டி உதைத்தார்…. 4 மாத கரு வெளிய வந்துடுச்சு – ரேஷ்மாவின் மரண வேதனை!

கணவர் எட்டி உதைத்தார்…. 4 மாத கரு வெளிய வந்துடுச்சு – ரேஷ்மாவின் மரண வேதனை!

பிரபல கவர்ச்சி நடிகை ஆன ரேஷ்மா பசுபலேட்டி பல்வேறு திரைப்படங்களில் கிளாமரான காட்சிகளில் நடித்தது மட்டும் இல்லாமல் சீரியல் நடிகையாகவும் நடித்து பெரும் புகழ்பெற்றார். இதனுடைய விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டார்.

இவருக்கு திருமணம் ஆகி கணவர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.தற்போது மகனுடன் தனிமையில் தான் ரேஷ்மா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது முன்னாள் கணவர் குறித்தும் தனது மிக மோசமான வாழ்க்கை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது, அமெரிக்காவில் கணவருடன் இருந்தபோது நான் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததேன், அதை மறந்துவிட்டு என்னை அவர் அடித்துவிட்டார். அதனால் குழந்தை வெளியில் வந்துவிட்டது, அவர் பயத்தில் என்னை விட்டு ஓடிவிட்டார்.

தனியாக நானே என்ன செய்வது என தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்தேன். நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான், அப்போது முதல் 9 மாதம் வரை அவன் இன்குபெட்டரில் இருந்தான்.

அங்கு எனது நிலையை சமாளிக்க முடியாமல் இங்கு வந்தேன். ராகுல் பிறப்பதற்கு முன்பே எனக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. ராகுலும் போய்விடுவானோ என்ற பயம் எனக்குள் இருந்தது, அவனை காப்பாற்ற போராடினேன். என் முதல் குழந்தையை எல்லோரும் மறந்துவிட்டார்கள், ஆனால் என்னால் அந்த நாளை இன்று வரை மறக்கவே முடியவில்லை என எமோஷ்னலாக பேசியுள்ளார்.