தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா, லண்டனில் நடைபெற்று வந்த திரைப்படப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கோவைக்கு வருகை தந்தார். கோவை காந்திபுரத்தில் உள்ள 100 அடி சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட ‘ஐ மொபைல்ஸ்’ (iMobiles) ஷோரூம் திறப்பு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நடிகை திரிஷா வருகையைக் அறிந்து காந்திபுரம் பகுதிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வருகை தந்ததால் அப்பகுதியில் பெரும் கூட்டம் திரண்டது.
தனைக் காணத் திரண்ட ரசிகர்களின் அன்பைப் பார்த்த நடிகை திரிஷா, திறந்த காரில் நின்றவாறு வீதியில் பவனி சென்று அவர்களை நோக்கி கை அசைத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை அருகிலிருந்து பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் லேசான தள்ளுமுள்ளு சூழல் ஏற்பட்டதுடன், போக்குவரத்து நெரிசலும் உருவானது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களில் சிலர் திரிஷாவிற்கு ஆடைகள் மற்றும் கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை நேரில் வழங்க முயற்சித்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க காவல் துறையினர் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடிகை திரிஷா திறந்த காரில் சென்ற வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடை திறப்பு விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனது அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக நடிகை திரிஷா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.