Posted in

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அரபு கூட்டணி தலைவர் அகமது திபி தேர்வு

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டின் (Knesset) துணை சபாநாயகராக அரபு கட்சிகளின் கூட்டமைப்பான ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ தலைவர் அகமது திபி (Ahmad Tibi) திங்கட்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வலதுசாரி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இவர் இந்த முக்கியப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

அரபு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் அதிகரித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் ஒன்பது தற்காலிக துணை சபாநாயகர்களில் ஒருவராக அகமது திபி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அரபு கட்சிகள் கணிசமான இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் அரசியல் அரங்கில் முக்கியக் கூட்டமைப்பாக உருவெடுத்துள்ளன.

 

இந்தத் தேர்வுக்கு வலதுசாரி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்தனர். எனினும், பல்வேறு தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் கூட்டணிக் கணக்குகளும் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த நியாயம் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் அரசியலில் அரபு பிரதிநிதிகளின் பங்கு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருவதை இந்த நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது.